Onetamil News Logo

தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர்கள் நேரு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு,திட்ட வரைபடங்களை மக்கள் பார்வைக்கு வைக்க அமைச்சர் நேரு உத்தரவு 

Onetamil News
 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர்கள் நேரு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு,திட்ட வரைபடங்களை மக்கள் பார்வைக்கு வைக்க அமைச்சர் நேரு உத்தரவு 


தூத்துக்குடி 2021 ஜூலை 24 ;தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர்கள் நேரு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்
மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகளையும் மீளவி;ட்டான் பகுதியில் உள்ள சி.வ.குளத்தை அமைச்சர்கள் நகர்புற வளர்ச்சித்துறை குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா, கூடுதல் அரசு செயலாளர் கில்தாஸ்மீனா, எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மாநகராட்சி ஆணையா சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர் கீதா முருகேசன், மாவட்ட அணி செயலாளர்கள் மதியழகன், ரமேஷ், அந்தோணி ஸ்டாலின், கஸ்தூரி தங்கம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் பாலகுருசாமி, ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், மாநகர மருத்துவ அணை அமைப்பாளர் அருண்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் செல்வின், அருண் சுந்தர், மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், வர்த்தக அணிதுணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் ராஜ், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி கதிரேசன், வட்டச் செயலாளர்கள் சாரதி, நாராயணன், கங்கா ராஜேஷ், ஹாட்லி, முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், ஜான்சி ராணி, நவநீதன், கலைச்செல்வி திலகராஜ், தெற்கு மாவட்ட மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், அவைத்தலைவர் அருணாசலம், மாநகராட்சி பொறியாளர் சண்முகக்கனி, உதவிப்செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நேரு அளித்து பேட்டியில் தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு வருகிறோம். அதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறுகின்ற பணிகளை பார்வையிட்டோம். குறிப்பாக மீளவிட்டான் சி.வ.குளம் பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்துள்ளோம். கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகளை அதிமுக ஆட்சியில் கிடப்பில் போட்டு விட்டனர். இதை மூன்று மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். புதிய பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்து திறக்கப்படும். உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார், அதுபோல் மாநிலம் முழுவதும் பல்வேறு உள்ளாட்சி புகார்கள் இருந்து வருகின்றன. இதையெல்லாம் ஆய்வு மேற்கொண்ட பின்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெறும். அதே போல் திமுக தேர்தல் அறிக்கையில் நகராட்சியை மாநகராட்சியாகவும், பேரூராட்சியை நகராட்சியாகவும், தரம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தோம். முழுமையான ஆய்வு முடிந்தபின் முதல்வர் ஸ்டாலின் அந்த அறிவிப்பை வெளியிடுவார். பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு..                                              தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடைபெற்று விடுகிறது. ஆனால் எந்த ஒரு இடத்திலும் திட்ட வரைபடம் வைக்கப்படவில்லை இதுகுறித்து செய்தியாளர் ஜெகஜீவன் கேட்ட கேள்விக்கு அமைச்சர் கே என் நேரு உடனடியாக திட்ட வரைபடங்களை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo