Onetamil News Logo

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு       

Onetamil News
 

 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு                   

தூத்துக்குடி அக்டோபர் 12 ;  தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மற்றும் மாண்புமிகு இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர்   சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
 
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்கள் மற்றும்  இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன்  ஆகியோர் தலைமையில்; இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மூ.வீரப்பன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆர்.ஜெயா,, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன்,, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  கூட்டத்தில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தெரிவித்ததாவது:
திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா 20.10.2017 தொடங்கி 26.10.2017 முடிய நடைபெறவுள்ளது. இதன் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 25.10.2017 (புதன்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
மாண்புமிகு மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு 2017ம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருக்கோயில் சார்பில்  பொதுசுகாதாரத்தை பேணும் பொருட்டு பொதுகழிப்பறைகள் ஆண்களுக்கு 134, பெண்களுக்கு 126 ஆக மொத்தம் 260 பொதுகழிப்பறைகளும், குளியறைகள் ஆண்களுக்கு 23, பெண்குளக்கு 19 ஆக மொத்தம் 42 குளியறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்காலிக நிழற்கூடங்கள் பேருந்து நிலையம் அருகில் 150க்கு 30 அடி அளவில் ஒன்றும் பொது சமையற்கூடம் பகுதியில் 80 அடிக்கு 20 அடி அளவில் ஒன்றும் திருக்கோயில் கலையரங்கம் பின்புறத்தில் உள்ள காலியிடத்தில் 30 அடிக்கு 80 அடி அளவில் ஒன்றும், 2 திருப்பணி மண்டபத்தில் வடபுறம் மூவாயிரம் சதுர அடி பரப்பளவில் ஒன்றும் வெள்ளைக்கல் மண்டபம் தென்புறத்தில் உள்ள காலயிடத்தில் 140 அடிக்கு 20 அடி அளவில் ஒன்றும் என அமைக்கப்பட உள்ளன. குடிநீர் வசதிகள் 24 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தற்காலிக கழிவறைகளும் வைக்கப்பட உள்ளன. 
திருக்கோயில் கந்தசஷ்டி யாகசாலை நிகழ்ச்சிகளை 42 அங்குல அளவுள்ள டுநுனு வுஏ க்கள் 20 மூலமும், 15 அடிக்கு 10 அடி அளவுள்ள அகன்ற திரை டுநுனு ளுஉசநநn மூலமும் பக்தர்கள்; தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரசம்ஹார நிகழ்ச்சியை மட்டும் 20 அடிக்கு 10 அடி அளவுள்ள அகன்ற திரை டுநுனு ளுஉசநநn மூன்று மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்கல்யாண நிகழ்;ச்சியை 42 அங்குள்ள அளவுள்ள டுநுனு வுஏ க்கள் மூலமு;, 20 அடிக்கு 10 அடி அளவுள்ள அகன்ற திரை டுநுனு ளுஉசநநn  ஓன்று மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கந்தசஷ்டி திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் 5 லட்சம் லிட்டர் குடிதண்ணீர் தட்டுபாடின்றி வழங்க குடிநீர் வடிகால் வாரியம் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் இடங்கள் பக்தர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கத்தைவிட கூடுதலாக திருக்கோயில் சண்முகவிலாசம் அருகில் மருத்துவ முகாம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. 
 
அவசர ஊர்திகள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிதாக மருத்துவமனையை சென்றடைய ஒவ்வொரு அவசர ஊர்திக்கும் வாக்கிடாக்கியுடன் கூடிய காவலர் ஒருங்கிணைப்பாளராக நிறுத்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருக்கோவிலுக்கு பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் அதிகம் பேர் வருகைதர உள்ளதால் 300 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செல்போன் சிக்னல் தடையின்றி கிடைக்க தற்காலிக அலைவரிசை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது என மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு   தெரிவித்தார்கள். 
 
 இந்து சமயம்; மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன்  பேசியபோது தெரிவித்ததாவது:
 
தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலத்தினர், வெளிநாட்டினர் என அனைத்துத்தரப்பினரும் பங்கேற்கும் சிறப்பு வாய்ந்த விழாவாக இவ்விழா உள்ளது. இந்த கந்த சஷ்டி திருவிழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இத்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி, தங்கும் வசதி, பாதுகாப்பு வசதி, தரமான உணவு உள்ளிட்ட வசதிகளும், மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரம், போக்குவரத்து சீர் செய்யும் பணி என          அனைத்து வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு சிறந்த முறையில் திருவிழா நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 20.10.2017 முதல் 26.10.2017 வரை திருவிழா நடைபெறுவதால் கூடுதலாக தங்கும் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொது கழிப்பிட வசதி கூடுதலாக செய்யப்பட்டள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், கண்காணிப்புப்பணி  என அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டள்ளன. அரசு கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து வசதிகளையும் செய்து தரும் - என  இந்து சமயம்; மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன்  தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், திருச்செந்தூர் கேட்டாட்சியர் கணேஷ்குமார், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், கோயில் இணை ஆணையர் பாரதி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், திருச்செந்தூர் திருக்கோவில் நிர்வாகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo