Onetamil News Logo

தூத்துக்குடிக்கு மு.க.ஸ்டாலின் வருகை ;சிறப்பு வரவேற்பு 

Onetamil News
 

தூத்துக்குடிக்கு மு.க.ஸ்டாலின் வருகை;சிறப்பு வரவேற்பு 


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 15 ;தூத்துக்குடி வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தூத்துக்குடி விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்றாக வரவேற்பு அளித்தனர்.     

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. இல்லத்திருமணவிழா வரவேற்பு விழாவிற்கு வருகை தந்தார்.

 மறைந்த அண்ணாச்சி என் பெரியசாமி அவர்களின் பேரனும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்  பி. கீதா ஜீவன் எம்.எல்.ஏ ,ஜீவன் ஜேக்கப்  மகன் டாக்டர். மகிழ் ஜான் சந்தோஸ் சேலம் டாக்டர். ப்ராங்க் கிருபா –  பூர்ணிமா ப்ராங்க் ஆகியோரின் மகள் டாக்டர் கீர்த்தனா ஆகிய இருவருக்கும் கடந்த 12.02.2020 புதன்கிழமை அன்று சேலத்தில் திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி  இன்று (15.02.20) சனிக்கிழமை மாலை 5.00 மணி அளவில் தூத்துக்குடி ஏ.வி.எம்.கமலவேல் திருமண மண்டபத்தில் வைத்து தி.மு.கழக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலின் தலைமையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை தி.மு.க. துணை தலைவர்  கனிமொழி கருணாநிதி முன்னிலையில் நடைபெற இருக்கிறது.இதில் கலந்து கொள்வதற்காக கழக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து மதியம் 12.00 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையம் வருகை புரிந்தார்.தூத்துக்குடி விமான நிலையம் வருகை தரும் அவருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ,சண்முகையா எம்.எல்.ஏ,முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ,ஐ.பெரியசாமி,பூங்கோதை ஆலடி அருணா,தங்கம் தென்னரசு,திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாபன்.,மனோ தங்கராஜ்., ஆஸ்டின்.எம்.எல்.ஏ., அப்பாவு எம்.எல்.ஏ., தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ,தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் மாடசாமி,தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் எம்.ஆர்.மகேந்திரன் முடிவை ஊராட்சி செயலர் வெங்கடேசமாரியப்பன் ,வக்கீல் அணி துணை தலைவர் பூங் குமார்,மாவட்ட காலைநேர அணி இராமஜெயம்,எஸ்.ஆர்.சுப்பிரமணியம் ,மாவட்ட பிரதிநிதி ஆட்டோ கோபால்,முடிவை என்.கண்ணன்,வடக்கு மாவட்ட மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் துரை ,மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகபெருமாள்,ஒன்றிய செயலாளர் மாடசாமி,புதுக்கோட்டை 9 வது வார்டு ஒன்றிய செயலர் முத்துக்குமார்  ஜோதிடேவிட், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார் ரூபன், திருச்சிற்றம்பலம்,அம்பா சங்கர் வசுமதி,பேரூரணி ஊர்த் தலைவர் பேரூரணி சித்ரா செல்வி, உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இன்று மாலை 5.00 மணிக்கு நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் தூத்துக்குடி வடக்கு,தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,மாநகர, நகர, ஒன்றிய பகுதி, பேரூர் மற்றும்; ஊராட்சிக் கழக செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள்,  அனைவரும்; பெருந்திரளாக கலந்து கொள்கின்றனர்..  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo