Onetamil News Logo

புதியம்புத்தூரில்  பொங்கல் பரிசுத் தொகுப்பை  எம்.எல்.ஏ சுந்தரராஜ்   துவக்கி வைத்தார்.

 
Onetamil News
Onetamil News
 
 

புதியம்புத்தூரில்  பொங்கல் பரிசுத் தொகுப்பை  எம்.எல்.ஏ சுந்தரராஜ்   துவக்கி வைத்தார்.


 தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில்  பொங்கல் பரிசுத்தொகுப்பை  எம்.எல்.ஏ சுந்தரராஜ்   துவக்கி வைத்தார்.  
இவ்விழாவில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பை   ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சுந்தரராஜ்  வழங்கி  பேசியதாவது.,
 உலகத் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் திருவிழா தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் திருநாளான அறுவடைத் திருநாள் உழவருக்கு நன்றி செலுத்தும் திருநாள் ஆகும். இறைவனுக்கும், இயற்கைக்கும், உழவருக்கும், உழவருக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி நவில்கின்ற நாள் பொங்கல் திருநாள். தமிழர் கலாச்சாரத்தில் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. மக்களுக்கு செய்யும் தொண்டு தெய்வத்திற்கு செய்யும் தொண்டு என்பார்கள். மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவிக்கின்ற ஒவ்வொரு திட்டமும் மக்களின் வாழ்வாதாரத்தை உணர்த்தும் திட்டமாக இருக்கும்.  அம்மா  தான் செயல்படுத்திய ஒவ்வொரு திட்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்று பேசி முடித்தார்.இதில் முன்னாள் எம்.எல்.ஏ சிவபெருமாள்,மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo