மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா!
நிறுவனர் முனைவர் S.கிளிட்டஸ் பாபு பங்கேற்பு!
தூத்துக்குடி வாகைக்குளம் St. மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஸ்காட் கல்வி நிறுவனர் முனைவர் S.கிளிட்டஸ் பாபு பங்கேற்று சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியை ஸ்காட் கல்வி நிறுவனர் முனைவர் S.கிளிட்டஸ் பாபு, ஸ்காட் குழும தாளாளர் C.பிரியதர்ஷினி அருண் பாபு, ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் பேசுகையில், கல்லூரியில் பயிலும்போதே அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற்ற நிகழ்வினையும், கல்லூரி நிர்வாகத்தின் சிறந்த கல்வி மற்றும் பேராசிரியர்களின் அளிக்கும் திறன் பயிற்சியைப் பற்றி எடுத்துரைத்தனர். அடுத்ததாக கல்லூரியின் ஆய்வகங்கள் மூலம் மாணவர்களுக்கு செயல் திறன் அளிக்கப்பட்ட அம்சங்களையும் அவர்கள் எடுத்து கூறினர்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் (மாணவர் சேர்க்கை) முனைவர் ஜான் கென்னடி சிறப்புரையாற்றினார். அப்போது அவர்,இங்கு மாணவர்களுக்கு பேராசிரியர்கள் செயல்முறை பயிற்சியை அளிக்கிறார்கள். 4 ஆண்டுகளில் மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். நிறுவனர் முனைவர் S.கிளிட்டஸ் பாபு பேசுகையில், ‘எமது கல்வி நிறுவனத்தில் 100 சதவீத வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் சிறந்த கல்வி, நவீன ஆய்வகங்கள் மூலம் நீங்கள் சாதிப்பதற்கு பேராசிரியர்கள் கற்றுத்தருகிறார்கள். மாணவர்கள் திறன் வளர்ச்சியை கற்பதன் மூலம் உயர்ந்த நிலையை அடையமுடியும். அதிக நேரம், கடினமாக உழைத்தால் தான் அதிக சம்பளம் பெற முடியும். உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார் பொதுமேலாளர்கள் முனைவர் K.ஜெயக்குமார், S.கிருஷ்ணகுமார், இயக்குனர் வேலைவாய்ப்பு முனைவர் முகமது சாதிக் ஆகியோரும் சிறப்புரையாற்றினார்கள். .இறுதியாக இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்வில் இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக மேலாளர் முனைவர் விக்னேஷ் செய்திருந்தார்.