Onetamil News Logo

  மாப்பிள்ளையூரணியில் 515.72 கோடி திட்டமதிப்பீல் ஜல்ஜீவன் மிஷன் குடிநீர் திட்டத்திற்கு கனிமொழி எம்.பி அடிக்கல் நாட்டினார். அமைச்சர்கள் எல்எல்;ஏக்கள் பங்கேற்பு

Onetamil News
 
 

மாப்பிள்ளையூரணியில் 515.72 கோடி திட்டமதிப்பீல் ஜல்ஜீவன் மிஷன் குடிநீர் திட்டத்திற்கு கனிமொழி எம்.பி அடிக்கல் நாட்டினார். அமைச்சர்கள் எல்எல்;ஏக்கள் பங்கேற்பு


தூத்துக்குடி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி(61) ஒட்டப்பிடாரம்(88) கயத்தாறு(16) கோவில்பட்டி(22) புதூர்(83) மற்றும் விளாத்திகுளம்(93) ஒன்றியங்களை சார்ந்த 363 குடியிருப்புகளுக்கான தாமிரபரணி ஆற்றை நீராதாரமாக கொண்ட கூட்டுகுடிநீர் திட்டம் ஜல்ஜீவன் மிஷன் 515.72 கோடி திட்டத் தொடக்க விழா மாப்பிள்ளையூரணி ஊராட்சி ராம்தாஸ் நகர் சிலோன் காலணியில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தூர்பாண்டி வரவேற்புரையாற்றினார்.
       கனிமொழி எம்.பி ஜல்ஜீவன் மிஷன் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பேசுகையில் இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் 5 லட்சம் குடும்பங்கள் பலனடைவார்கள் 18 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று போடப்பட்டிருந்தாலும் இந்த பணியை எடுத்துச் செய்பவர்கள் 12 மாதத்தில் முடித்து தருவதாக கூறியுள்ளார்கள். இந்த திட்டத்தின் மூலம் ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், கோவில்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பலனடையவுள்ளார்கள்.  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும் போது திருச்செந்தூர் உடன்குடி சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள எல்லா கிராமத்திற்கும் இதுபோன்ற திட்டத்தை கொண்டுவர வேண்டும். அதற்கு நான் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நாம் இருவரும் இணைந்து அமைச்சரை சந்தித்து திட்டத்தை நிறைவேற்றுவோம். புதியதாக 60 நீர்தேக்க தொட்டிகளும், 40 தரை நீர்த்தேக்க தொட்டிகளும் கட்டப்படவுள்ளன. எல்லா அதிகாரிகளும் இணைந்து இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று பேசினார்.
     அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் முதலமைச்சர் இந்த ஆண்டு சிறப்பு நிதியின் மூலம் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் பல்வேறு கிராம மக்கள் பயனடைவார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் இதுபோன்ற ஓரு திட்டத்தை செயல்படுத்தினார்கள். அந்த குழாய்களில் தண்ணீர் வருகிறதா தண்ணீர் இருக்கிறதா, என்பதை பற்றி எதையும் சிந்திக்கவில்லை. ஆனால் நம்முடைய முதலமைச்சர் நீர் ஆதராங்களை உருவாக்குவது மட்டுமின்றி அது பாரமரித்தல் நீர் செல்லும் திட்டம் முறையாக செயல்படுத்த வேண்டும் என்று நினைப்பார் என்று பேசினார்.
    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் முதலமைச்சரின் சிறப்பான இந்த திட்டத்தின் மூலம் 3 தொகுதிகள் பலனடையும் வகையில் கனிமொழி எம்.பி, இதைக் கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் மக்கள் பயனடைவார்கள் தெற்கு பகுதியிலுள்ள திருச்செந்தூர் சாத்தான்குளம் உடன்குடி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் இதுபோன்ற திட்டத்தை கனிமொழி எம்.பி உருவாக்கி கொடுத்து அப்பகுதியில் உள்ள குறைகளை தீர்க்க வேண்டும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் எப்போது சந்தித்தாலும் குடிதண்ணீர் தட்டுபாடு உள்ளது. அதை தீர்க்க வேண்டும் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். என்று கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கிறார். அதே போல் ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கரும் கோரிக்கை வைப்பார் எல்லாம் நிறைவேற்றப்படும் என்று பேசினார்.
     விழாவில் மாவட்ட ஊராட்;சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, ஒன்றிய குழு தலைவர்கள் வசுமதி அம்பாசங்கர், கோமதிராஜேந்திரன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர் அம்பாசங்கர், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாணவரணி துணை அமைப்பாளர்கள் மாரிச்செல்வம், ஜீவா, ஒன்றிய அவைத்தலைவர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், வசந்தகுமாரி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், ஜேசுராஜா, தங்கபாண்டி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் உலகநாதன், உதவி நிர்வாக பொறியாளர்கள் மகேஷ்குமார், மணி, ஜான் செல்வன், உதவி பொறியாளர்கள் மெர்சி, ஆனந்தவள்ளி, குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு கோட்டம் நிர்வாக பொறியாளர் ராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, ஹெலன் பொன்மணி, உதவி அலுவலர் மகேஸ்வரி,  தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பொறியாளர் தளவாய், மேற்பார்வையாளர் முத்துராமன், தாசில்தார் பிரபாகரன், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர் அமலநாதன், கேயெம் பிரைவேட் லிமிடெ; நிர்வாக இயக்குநர் ராமசந்திரன், வக்கீல் சோனாராஜன், கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் பொன்னுச்சாமி, ராயப்பன், கருணா, கபடிகந்தன், வக்கீல் கிருபாகரன், மணி, அல்பட், லிங்கராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி நிர்வாக பொறியாளர் ராஜா நன்றியுரையாற்றினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo