Onetamil News Logo

எம்.பி சசிகலா புஸ்பா கதை ;வல்லவன் முதல் ராமசாமி வரை ;வளரும் தலைமுறைக்கு ரோல் மாடலாக மாறினாரா? ;இப்படியும் வாழலாமா? -பரபரப்பு

Onetamil News
 

எம்.பி சசிகலா புஸ்பா கதை ;வல்லவன் முதல் ராமசாமி வரை ;வளரும் தலைமுறைக்கு ரோல் மாடலாக மாறினாரா? ;இப்படியும் வாழலாமா? -பரபரப்பு புதுடில்லி:  2018 மார்ச்.27 ;புது டெல்லியில்  திட்டமிட்டபடி, வழக்கறிஞர் ராமசாமிக்கும், ராஜ்யசபா, எம்.பி., சசிகலா புஷ்பாவுக்கும், டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், பாரம்பரிய முறைப்படி, நேற்று மறுமணம் நடந்தது.பல்வேறு சர்ச்சைகளில் ஏற்கனவே அடிபட்டு வந்த, ராஜ்யசபா, எம்.பி., சசிகலா புஷ்பா, (41), தன் கணவரான, லிங்கேஸ்வர திலகனிடமிருந்து மார்ச் 13 ம் தேதி விவாகரத்து பெற்றார்.                                                                           
அதன் பின்னர் திட்டமிட்டபடி , டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர், ராமசாமியுடன், சசிகலா புஷ்பாவுக்கும் மார்ச் 26 ம் தேதி  திருமணம் நடக்கவுள்ளதாக அழைப்பிதழ் மார்ச் 15 ம் தேதி வெளியானது.                                          
 இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த சத்திய பிரியா என்ற பெண், ராமசாமிக்கும், தனக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதாக மதுரை கலெக்டர் யிடம்  புகார் அளித்தார்; மேலும், சசிகலா புஷ்பாவுக்கு நடக்கவிருந்த திருமணத்திற்கு, கோர்ட்டில் தடையும் வாங்கினார்.                                                                                         
திட்டமிட்டபடி திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில், நேற்று டில்லி பாரகம்பா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், ஆனால் கோர்ட் தடையை மீறி  சசிகலா புஷ்பாவுக்கும், ராமசாமிக்கும் திருமணம் நடந்தது. பாரம்பரிய முறைப்படி, தமிழ் பண்பாட்டுடன், அலங்கரிக்கப்பட்ட மணமேடையில், வேத மந்திரங்கள் முழங்க, சசிகலா புஷ்பா கழுத்தில், ராமசாமி தாலி கட்டினார்.                                                       
ஏதாவது அசம்பாதவிதம் ஏற்படலாம் என்று போலீஸ் பாதுகாப்புடன் , ஓட்டலின் வெளியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஊடகங்கள் உட்பட வெளியாட்கள் யாருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. திருமண நிகழ்ச்சியில், தம்பதியரின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். 
                                                                                                                                                  இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த சத்திய பிரியா என்ற பெண் , ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், தன்னை இரண்டாவதாகத் தான் திருமணம் செய்தார் என்றும், ராமசாமி தரப்பு கூறுகிறது.தனக்கு நடந்த முதல் திருமணத்தை மறைத்து, அந்த பெண், தன்னை திருமணம் செய்ததால், உண்மை தெரிந்ததும், அந்த திருமணம் செல்லாது என கூறி, சட்டப்படி அதற்கான சான்றிதழையும், ராமசாமி பெற்று வைத்துள்ளதாகவும், அவர் தரப்பில் கூறப்படுகிறது.சசிகலா புஷ்பாவுடனான திருமணத்தை தடை செய்து வழங்கப்பட்டுள்ள, மதுரை கோர்ட்டின் உத்தரவும், ராமசாமிக்கு வந்து சேரவில்லை என, கூறப்படுகிறது. 
சசிகலா புஷ்பா வாழ்க்கை வரலாறு ;  சசிகலா புஷ்பாவிற்கு தூத்துக்குடி மாவட்டம், முதலூர் அருகில் உள்ள அடையல் கிராமம் தான்  சொந்த ஊர். இவரது  அம்மா கௌரி தூத்துக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியை. அப்பா தியாகராஜன்  டிரைவர் பணி செய்துள்ளார். தூத்துக்குடி ஹோலிகிராஸ் கான்வெண்டில் 10ம் வகுப்பு படிக்கும்போது  டீக்கடை நடத்திய வல்லவன்  என்பவரை  அழைத்துக்கொண்டு ராமாநாதபுரம்  சென்று விட்டார் ,போலீஸ் மோப்பத்தில் நள்ளிரவு 12 மணிக்கு போலீஸ் பிடித்தது. 
                                             
அதன் பின்னர் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டார் சசிகலா புஷ்பா ,டீச்சர் டிரெய்னிங் படிப்பு முடித்துவிட்டு  எலெக்ட்ரீஷியன் லிங்கேஸ்வரதிலகரை  திருமணம் செய்தார். அதன் பின்னர் சென்னையில் வசித்தார். அங்கு நர்சரிப் பள்ளி ஆசிரியையாகவும்,  அண்ணாநகரில் மகளிர் விடுதி, மசாஜ் சென்டர், டீம் ஐ.ஏ.எஸ். அகாடமி போன்றவையும் நடத்தினார். 
 
விவி குழுமத்தின் ஆசியுடன் திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க. மகளிரணி இணைச் செயலாளராக பொறுப்பு வகித்தார். அதற்க்குப் பிறகு தூத்துக்குடியில்  மேயர் பதவி கிடைத்தது.  
தீடீர் அதிர்ஷ்டம் அடித்தது அது தான் மேயராக இருந்த பொழுதே  ராஜ்யசபா எம்.பி யாக உருவாக்கப்பட்டார்.  
                                               
இந்த நிலையில் ராஜ்யசபா எம்.பி யானார்.அப்பொழுது  திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. திமுக எம்.பி. திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருந்ததாக பல படங்கள் வெளி வந்து ஒரு மிகப்பெரிய சர்ச்சையை  உருவாக்கியது . ஜெயலலிதா பற்றி பாராளுமன்றத்தில் பேசி குழப்பத்தை உருவாக்கினார் .இதனால் பல்வேறு பிரச்சனைகளால் சிக்கித்தவித்தார். அப்பொழுது  அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாபுஷ்பாவை ஜெயலலிதா நீக்கினார்.                                                                
 சசிகலா புஸ்பா எம்.பி.யின் வீட்டில் வேலைபார்த்த இளம்பெண்கள் பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்கள். இதன் பேரில்   சசிகலா புஷ்பா, அவருடைய முதல் கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலாபுஷ்பாவின் தாயார் கவுரி ஆகியோர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது,   இதனால் டெல்லியிலேயே  சசிகலா புஸ்பா நிரந்தரமாக  தங்கிவிட்டார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo