Onetamil News Logo

தூத்துக்குடியில் வட்டியில்லா கடன் தருவதாக கூறி 90 பவுன் நகைகள் மோசடி  செய்த முகம்மது ரபீக் மீது போலீசில் புகார்.

 
Onetamil News
Onetamil News
 
 

தூத்துக்குடியில் வட்டியில்லா கடன் தருவதாக கூறி 90 பவுன் நகைகள் மோசடி  செய்த முகம்மது ரபீக் மீது போலீசில் புகார்.


தூத்துக்குடி ஜனவரி 4 : தங்க நகைக்கு வட்டி இல்லா கடன் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி தூத்துக்குடி, நரிப்பையூர் பகுதியைச் சேர்ந்த பல குடும்பத்தினரிடம் 90 பவுன் நகையுடன் தலைமறைவானவரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்கள் எஸ்.பி  அலுவலகத்தை                 முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.                                                                                                                                                                    தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் முகமது ரபீக் . இவர் பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு வந்து இடத்தில் பழக்கமானவர்களிடம் காயல் மூசா அழகிய கடன் திட்டம் என்ற நிறுவனத்தை அரசு அனுமதியுடன் நடத்தி வருவதாகவும் இத்திட்டத்தில் வட்டி இல்லா கடன் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி நரிப்பையூர், மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பல இஸ்லாமிய் குடும்ப பெண்களிடம் 90 பவுன் நகைகளை வாங்கிவிட்டு தலைமறைவானார். முகம்மது ரபீக்கால் பாதிக்கப்பட்ட நரிப்பையூர் ப்ரியா பானு, அவுல் மைதீன், பரிசா பானு, சம்சு  நவாஸ், அகமது அமீது ஆகியோர் முகம்மது ரபிக்கை கைது செய்யக் கோரி இன்று எஸ்.பி  அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.அதில்  முகமது ரபீக் பழைய காயல், தூத்துக்குடி,நரிப்பையூர் ஆகிய பகுதிகளில் இது போல் பல குடும்பங்களை ஏமாற்றி நகைகளையும், நகை திருப்ப கொடுத்த பணத்துடன் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் இன்று எஸ்.பி  அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். இவர்களுடன் தூத்துக்குடி விசிக தூத்துக்குடி தொகுதி செயலாளர் இக்பால் கலந்து கொண்டார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo