Onetamil News Logo

திருமணம் செய்ய வற்புறுத்திய 28வயது அரசு ஊழியரான விதவை பெண் கொன்று புதைப்பு  44வயது கள்ளக்காதலன் உள்பட 3பேர் கைது 

Onetamil News
 

திருமணம் செய்ய வற்புறுத்திய 28வயது அரசு ஊழியரான விதவை பெண் கொன்று புதைப்பு  44வயது கள்ளக்காதலன் உள்பட 3பேர் கைது 


மும்பை,  2019 பிப்ரவரி 10 ;திருமணம் செய்ய வற்புறுத்திய அரசு ஊழியரான 28வயது விதவை பெண்ணை  கொன்று புதைத்த 44வயது கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை மான்கூர்டு ஜோதிலிங் நகரை சேர்ந்த அரசு ஊழியரான விதவை பெண் ரோகிணி(வயது28). இவர் நவிமும்பை வாஷியில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதர நிலையத்தில்  ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந்தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ரோகிணியின் சகோதரர் ராஜேந்திரா மான்கூர்டு காவல் நிலையத்தில்  புகார் வழங்கினார்..இந்த நிலையில் மான்கூர்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இதற்கிடையே காணாமல் போன ரோகிணியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், அதே ஆஸ்பத்திரியில் ஊழியராக பணிபுரிந்து வந்த சுனில் சிர்கே(44) என்பவர் தான் பணம் எடுத்தது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில் ரோகிணிக்கும், சுனில் சிர்கேவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்தநிலையில் ரோகிணி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சுனில் சிர்கேவை வற்புறுத்தி வந்தார். ஆனால் சுனில் சிர்கே அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ரோகிணி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் ஆத்திரமடைந்த சுனில் சிர்கே அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.இதற்காக சம்பவத்தன்று ரோகிணியை சுற்றுலா செல்லலாம் வா எனக்கூறி, சத்தாராவில் உள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றார்.அங்கு தனது கூட்டாளிகளான நவிமும்பை மாநகராட்சி பஸ் டிரைவர் விஜய் சிங், மற்றொரு டிரைவர் ராமச்சந்திரா ஜாதவ் ஆகியோரை வரவழைத்து உள்ளார். பின்னர் 3 பேரும் சேர்ந்து ரோகிணியை மம்பட்டியால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை அங்குள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இதையடுத்து போலீசார் சுனில் சிர்கே, ராமச்சந்திரா ஜாதவ், விஜய்சிங் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் சத்தாரா சென்று புதைக்கப்பட்ட ரோகிணியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo