Onetamil News Logo

மும்பையில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் ;5 நாட்கள் கொட்டி தீர்த்தது. அப்போது, மலாட் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 31 பேர் பலி

Onetamil News
 

மும்பையில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் ;5 நாட்கள் கொட்டி தீர்த்தது. அப்போது, மலாட் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 31 பேர் பலி


மும்பை 2019 ஜூலை 27 ;மும்பையில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் ;5 நாட்கள் கொட்டி தீர்த்தது. அப்போது, மலாட் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 31 பேர் பலியானார்கள்.வெள்ளக் காடான மும்பை, இன்றும் கன மழை எச்சரிக்கை, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.
மும்பையில் பெய்துவரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கி நிற்பதால் நகரின் முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.மகாராஷ்டிராவில் கடந்த மாத இறுதியில் தீவிரம் அடைந்த பருவமழை 5 நாட்கள் கொட்டி தீர்த்தது.மும்பையில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் ;ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.அப்போது, மலாட் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 31 பேர் பலியானார்கள். மஹாராஷ்டிராவில் 700 பயணிகளுடன் சென்ற மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் சிக்கியது.
மஹாராஷ்டிரா மாநிலம் பத்லாப்பூர் மற்றும் வாங்கனி இடையே செல்லும் மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே மஹாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 700 பயணிகளுடன் சென்ற மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ் ரயில் பத்லாப்பூர் - வாங்கனி பகுதிகளுக்கு இடையே வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இதையடுத்து, மத்திய ரயில்வேயின் சிபிஆர்ஓ, என்.டி.ஆர்.எஃப் குழு மற்றும் கடற்படை இடைநிலை குழுக்கள் பயணிகளை மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டுள்ளதால் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு செல்ல தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன்பின்னர் இயல்புநிலை திரும்பியிருந்த நிலையில், மும்பை மற்றும் புறநகரில் நேற்று மீண்டும் கனமழை பெய்தது. நாள் முழுவதும் பெய்த மழையால் மும்பை நகரின் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின.
மாலையில் கொட்டித் தீர்த்த கனமழையால் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது. 
ஒரு மணி நேரத்தில் 10 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கோரேகான், அந்தேரி, பாந்த்ரா, சயான், மாடுங்கா போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
வடாலா, தாதர், குர்லா, செம்பூர், நவிமும்பை உள்ளிட்ட இடங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன.சயான்-பான்வெல் சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.வெளுத்து வாங்கிய மழையால் ரெயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது. பட்லாப்பூர் ரயில்நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் அந்த மார்க்கத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்திற்கு வரும் விமானங்களும், புறப்படும் விமானங்களும் தாமதமாக வந்து சென்றன.தொடர்ந்து மழை பெய்ததால் 17 விமானங்கள் வேறு நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டன.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், பால்கர், தானே, மும்பை, ரெய்காட். ரத்தினகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழையோ அல்லது மிகக் கனமழையோ பெய்யக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo