Onetamil News Logo

முறப்பநாடு அருகே நாணல்காடு கிராமத்தில் வாலிபர் வெட்டிக்கொலை 

Onetamil News
 

முறப்பநாடு அருகே நாணல்காடு கிராமத்தில் வாலிபர் வெட்டிக்கொலை 


தூத்துக்குடி ,2019 செப் 12 ;முறப்பநாடு அருகே நாணல்காடு கிராமத்தில் இசக்கி பாண்டி என்ற வாலிபர் வெட்டிக்கொலை செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே நாணல்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி (27),இன்று இரவு  நாணல்காடு பகுதியில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் இசக்கிபாண்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. .இதில்  அவர் சம்பவ இடத்திலே மரணமடைந்தார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அருண்பாலகோபாலன்,தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி கலைச்செல்வன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo