Onetamil News Logo

தூத்துக்குடியில் ஆணுறுப்பை அறுத்து வாலிபர் படுகொலை ; விஜய் ரசிகர்மன்ற தலைவர் பில்லாஜெகனுக்கு வலைவீச்சு

Onetamil News
 

தூத்துக்குடியில் ஆணுறுப்பை  அறுத்து வாலிபர் படுகொலை ; விஜய் ரசிகர்மன்ற தலைவர் பில்லாஜெகனுக்கு போலீஸ் வலைவீச்சு


                                                                                                                                                                                   
           தூத்துக்குடியில் சச்சின் என்ற வாலிபர் கொடுமான முறையில் ஆணுறுப்பை  அறுத்து படுகொலை செய்து ஜோதிநகர் காட்டுபகுதியில் வீசி சென்ற மர்மகும்பல் -பதட்டம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
துாத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர்  பில்லாஜெகன் (45).இவர் பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றார்.இவரது முதல் மனைவிக்கு பிறந்த  மகள் ரதி  (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர்  திருநெல்வேலியில் உள்ள  கல்லுாரியில் பிஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார். பில்லா ஜெகன் மகளை அதே தெருவை சேர்ந்த சகாயராஜ் மகன் சச்சின் (26) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நேற்று முன் தினம்  மாலை ரதி பீச் ரோட்டிலுள்ள மதுரா கோட்ஸ் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது  அங்கு வந்த சச்சின் என்னை காதலிக்காவிட்டால் உன் முகத்தில் ஆசிட் ஊற்றி  விடுவேன் என்று  மிரட்டியதாக கூறப்படுகிறது.இது குறித்து வடபாகம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால்  போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்ததாக கூறப்படுகிறது.                                                                                                                                                          
      திடீரென இன்று  இரவு 6 மணியளவில் 2ம் கேட் பகுதியில் நின்று கொண்டிருந்த சச்சினை பில்லாஜெகன் மற்றும் அவரது சகோதரர்கள் ,அவரது ஆதரவாளர்கள் 2 கார்களில் வந்த சச்சினை காரில்  கடத்தி சென்று தனசேகரன் நகர் பகுதியில் உள்ள   பில்லாஜெகன் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி ஆணுறுப்பை அறுத்துள்ளனர் இதனால்  சச்சின் உயிரிழந்தார். அதன்  பின்னர் சச்சினை காரில் துாக்கி கொண்டு ஜோதிநகர் காட்டுப்பகுதியில் வீசி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.                                                                       
      இது குறித்து தகவல் அறிந்து துாத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையில் போலீசார் ஜோதி நகருக்கு சென்றனர். அங்கு சென்று சச்சின்  உடலை கைப்பற்றி துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில்  தொடர்புடைய குற்றவாளிகள் போலீசார்  தேடி வருகின்றனர்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo