Onetamil News Logo

கும்பகோணம் அருகில் வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல்  வாலிபர் படுகொலை ,இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு,கத்திக்குத்து 

 
Onetamil News
Onetamil News
 
 

கும்பகோணம் அருகில் வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல்  வாலிபர் படுகொலை ,இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு,கத்திக்குத்து 


கும்பகோணம் அருகிலுள்ள சாக்கோட்டை அம்பேத்கர் நகரில் வசித்து வரும் பவுன்ராஜ் (65 ) மற்றும் அவரது மூத்த மகன்  சுந்திரபாண்டி வயது (35 ) இளைய மகன்   மருதுபாண்டி (30 ) ஆகியோர்  இரவு 9 மணியளவில்   வீட்டில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த சிலர் முன் விரோதத்தால்   பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியதில்   சுந்திரபாண்டி  சம்பவ இடத்திலே இறந்தார்   இவரின் மனைவி பெயர் கயல்விழி இவர்களுக்கு  இரண்டு மாத பெண் குழந்தை ஒன்று  உள்ளது இத்தகவல் அறிந்த நாச்சியார் கோயில் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்க்கு விரைந்து வந்து இச்சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட  சுந்திர பாண்டி உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தார்கள் அவரின் தந்தையான பவுன்ராஜ்க்கு முதுகில் வெட்டு காயமும்,  தம்பிக்கு தொடையில் கத்தி குத்தினால் காயமும் ஏற்ப்பட்டது ,இவரகள் இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் இக்கொலை சம்பவம் பற்றி நாச்சியார் கோவில் காவல்துறையினர்  தீவிர விசாரணை செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்
நமது செய்தியாளர்  , குடந்தை.ப.சரவணன்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo