Onetamil News Logo

நாம் இந்தியர் கட்சி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் நியமனம் மாவட்ட செயலாளர் டி.ஜெயகணேஷ் தகவல்

Onetamil News
 

நாம் இந்தியர் கட்சி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் நியமனம் மாவட்ட செயலாளர் டி.ஜெயகணேஷ் தகவல்



தூத்துக்குடி, மார்ச்.11:
நாம் இந்தியர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, நாம் இந்தியர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் டி.ஜெயகணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் நாம் இந்தியர் கட்சியினை பலப்படுத்தி, மக்கள் பணியாற்றிடும் வகையில் புதிய நிர்வாகிகளை கட்சியின் நிறுவனத் தலைவர் என்.பி.ராஜா நியமனம் செய்து அறிவித்துள்ளார். இதன்படி, தூத்துக்குடி மாவட்ட அவைத் தலைவராக டி.அமிர்தகாந்தன், மாவட்ட துணைச்செயலாளர்களாக எஸ்.ஜெயக்குமார், எம்.மாரிமுத்து ஆகியோரும், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக ஜெ.பாலாஜி, தூத்துக்குடி மாநகர தலைவராக பி.விக்டர் குணசிங், மாநகர செயலாளராக வழக்கறிஞர் எக்ஸ்.ரூஸ்வெல்டு, மாநகர பொருளாளராக எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
      
      மேலும், மாநகர துணைச்செயலாளர்களாக எம்.ஆரோக்கியசாமி, ஏ.அந்தோணி குபேந்திரன், எஸ்.பரமசிவம் ஆகியோரும்,  மாநகர இளைஞர் அணி அமைப்பாளராக ஏ.இசக்கிகுமார், தூத்துக்குடி ஒன்றிய தலைவராக பி.பெரியசாமி என்ற பேச்சிராஜா, தூத்துக்குடி ஒன்றிய செயலாளராக ஏ.சரவணக்குமார், தூத்துக்குடி ஒன்றிய துணைச்செயலாளர்களாக எக்ஸ்.அலெக்ஸ், பி.சின்னத்துரை ஆகியோரும், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளராக எம்.ராஜாராம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய துணைச்செயலாளராக எஸ்.பெரியதுரை, சாயர்புரம் நகரத் தலைவராக ஏ.ஜெயபால், சாயர்புரம் நகர செயலாளராக எம்.பரத் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதில் கூறியுள்ளார்.
புதிய நிர்வாகிகளுக்கு கட்சியின் இதர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo