Onetamil News Logo

மீன்வளப் பொறியியல் கல்லூரி சார்பில் கீச்சாங்குப்பம் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

Onetamil News
 

மீன்வளப் பொறியியல் கல்லூரி சார்பில் கீச்சாங்குப்பம் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி



நாகப்பட்டினம் 2018 ஏப்ரல் 5 ;நாகப்பட்டினம் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ,மெட்ரோ மீன்பதன தொழில்நுட்ப கூடம் மீன்வளப் பொறியியல் கல்லூரி சார்பில் கீச்சாங்குப்பம் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான மீன்வள பொறியியல் கல்லூரி மற்றும் பெட்ராக் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி “மதிப்புக்கூட்டப்பட்ட மீன்பொருட்கள் தயாரித்தல், சந்தைப்படுத்துதல் மற்றும் மீன்பதன தொழில் காப்பகம் நிறுவுதல்” என்னும் தலைப்பில் கீச்சாங்குப்பத்தில் உள்ள மெட்ரோ மீன்பதன தொழில்நுட்ப கூடத்தில் நடத்தப்பட்டது.பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்  முனைவர். கு. ரத்னகுமார்  தொடங்கி வைத்து, மீன்களின் மருத்துவ குணங்கள் மற்றும் மதிப்புக்கூட்டலின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். பெட்ராக் தொண்டு நிறுவனத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி திட்ட மேலாளர்   ஜெரால்டு   விளக்கினார். முதல் நாள் பயிற்சியில் உப்பு மற்றும் மசாலா கருவாடு, ஆயத்த இறால் குழம்பு, மீன் சான்விட்ஜ் மற்றும் மீன் கட்லெட் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட மீன்பொருட்கள் தயாரிக்கும் முறை பற்றி விவரமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டாம் நாள் பயிற்சியில்; மீன்/ இறால் ஊறுகாய், மீன் குக்கிஸ், மீன் பாஸ்தா, மீன் நூடுல்ஸ் மற்றும் மீன் சமோசா தயாரிக்கும் முறைகள் பற்றி செய்முறை விளக்க பயிற்சி வழங்கப்பட்டது. நிறைவு விழாவிற்கு மீன்வளப் பொறியியல் கல்லூரி முதல்வர், முனைவர் சி. பாலசுப்பிரமணியன்   தலைமை தாங்கி பயிற்சி பெற்றோரை தொழில் தொடங்கி தங்களுடைய வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக முன்னேறும்படி  சான்றிதழ்களை வழங்கினார்;. இப்பயிற்சி முகாமினை முனைவர் நா. மணிமேகலை இணைப்பேராசிரியர், உதவிப்பேராசிரியர் முனைவர். ப. கார்த்திக்குமார் மற்றும்  முனைவர். இரா. பிரம்மபுரீஸ்வரன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இப்பயிற்சியில் பத்துக்கும் மேற்பட்ட தாய்மார்கள் பங்குக்கொண்டு பயனடைந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo