Onetamil News Logo

செய்துங்கநல்லூர் & எஸ்.என்.பட்டி வரதராஜ பெருமாள் கோயிலில்  மண்டல பூஜை நிறைவு

Onetamil News
 

செய்துங்கநல்லூர் & எஸ்.என்.பட்டி வரதராஜ பெருமாள் கோயிலில்  மண்டல பூஜை நிறைவு



 செய்துங்கநல்லூர், அக்.12
செய்துங்கநல்லூர்  எஸ்.என்.பட்டி  வரதராஜ பெருமாள் கோயிலில் 100  வருடங்களுக்கு பிறகு  திருப்பணி நடந்து கும்பாபிசேகம்  கடந்த ஆகஸ்ட் 31 ந்தேதி நடந்தது. அதன் பின் தொடர்ந்து 41 நாள்  மண்டல பூஜை நடந்தது. இந்த பூஜையை முன்னிட்டு   காலை 7 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், கோபூஜை, நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லெட்சுமி ஹோமம், தீப ஆராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடந்தது.  மாலையில் சிறப்பு மலர் அஞ்சலி நடந்தது. இதையொட்டி வீடுகளில் இருந்து மலர்களை சேகரித்து பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின் வரதராஜ பெருமாளுக்கு தங்களது கையால் அவர்கள் புஷ்பாஞ்சலி நடத்தினர். அதன் பின் சிறப்பு பூஜை நடந்தது.  பிரசாதம் வழங்கப்பட்டது. 
விழா ஏற்பாடுகளை எஸ்.என்.பட்டி ஊர் பொதுமக்கள் மிகச்சிறப்பாக செய்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo