Onetamil News Logo

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் பொதுமக்கள் 50 பேருக்கு உணவு பொருள்களை வழங்கினார்.

Onetamil News
 

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் பொதுமக்கள் 50 பேருக்கு உணவு பொருள்களை வழங்கினார்.           


தூத்துக்குடி 2020 மே 19 ;இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் அழகப்பபுரம், நாலுமாவடி பஞ்.,சில் இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் பொதுமக்கள் 50 பேருக்கு உணவு பொருள் வழங்கபட்டது.
இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள அழகப்பபுரம் ஊராட்சியில் ஏழைகள் 50 பேருக்கு உணவு பொருள் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு உத்தரவால் வருமானம் இன்றி உணவு பொருட்கள் வாங்க வழியின்றி தவித்து வருபவர்களுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் மலையன் அழகப்பபுரம் பஞ்., தலைவர் பூமாரி பாலமுருகன்,  துணைத்தலைவர் ஆறுமுகம் ஆகியோர் தங்களது பகுதியில் உள்ள ஏழைகளுக்கு உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாரசஸ், அப்பகுதி மக்கள் 50 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப்பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தார். இதனைத்தொடர்ந்து அழகப்பபுரம் பஞ்., அலுவலகத்தில் ஏழைகளுக்கு உணவு பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பஞ்.  தலைவர் பூமாரி பாலமுருகன்,  தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் பொதுமக்களுக்கு உணவு பொருள் வழங்கினார். இதில் கவுன்சிலர்கள், பஞ்., செயலர் கற்பகம்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo