Onetamil News Logo

கொரானா வைரஸ் கிருமியை அழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளை பின்பற்ற வேண்டும்! கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் வேண்டுகோள்!!

Onetamil News
 

கொரானா வைரஸ் கிருமியை அழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளை பின்பற்ற வேண்டும்!
கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் வேண்டுகோள்!!


நாலுமாவடி 2020 மார்ச் 27 ; கொரானா வைரஸ் கிருமியை அழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
         இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசுவிடுவிக்கிறார் ஊழியஸ்தாபகர் சகோ.மோகன் சி.லாசரஸ் விடுத்துள்ள வேண் டுகோளில் கூறியிருப்பதாவது:-அனைவருக்கும் எனது அன்பின் வாழ்த்துக்கள். நம்மு டைய தேசம் மிகமுக்கியமான,ஒருநெருக்கமான காலக்கட்டத்திற்குள் போய்க்கொண் டிருக்கிறது.இந்தபயங்கரமான கொள்ளைநோயின் தாக்கம் தீவிரமடைந்து வருவதாக சொல்லப்படுவதை நாம் கேள்விப்படுகிறோம்.இந்தியாவில் கொரானாவைரஸ் நோயின் தாக்கமானது 3-வது நிலை என்று சொல்கிறார்கள்.இந்நிலைதான்தீவிரமானபாதிப்பை உண்டாக்கிவிடும் என்கிறதினால்தான் அரசாங்கமும் 144 தடைஉத்தரவினை போட்டி ருக்கிறது.பிரியமானவர்களே இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அரசாங்கம் எல்லாக்காரியத்தையும் அறிந்ததினால்தான் நம்மைப் பாதுகாப்பதற்காக  இந்த தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.அதற்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.தயவுசெய்து அரசாங்கம் சொல்கிற நாள்கள்வரையிலும் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.வீட்டுக்குள்ளே இருக்கிறது நல்லது.இப்போது நம்மை தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் என்ன இருக்கிறதோ,அதை வைத்து சாப் பிட்டால் போதும்.காய்கறி கிடக்கலை,அதுகிடைக்கல எனவெளியே போவது தேவை யில்லை.அரிசி இருக்கும் அதைவைத்து கஞ்சி காய்ச்சு குடிக்கலாம் அது ரொம்ப சத்து என கூறுகிறார்கள்.வீட்டில் என்ன இருக்கிறதோ அதை சமைச்சி சாப்பிட்டுட்டு தயவுசெய்து வீட்டுக்குள்ளே இருங்க.இது நமக்காக,நமக்கு அரசாங்கத்தால் கொடுக் கப்படுகிற ஒரு ஆலோசனை. இத்தாலி தேசத்தில் இதுபோன்ற ஆலோசனைகளை அரசாங்கம் கொடுத்தபோது அதைஅங்குள்ளமக்கள்கேட்கவில்லை.அதைபெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. இதன் விளைவுதான் ஏராளமான மக்கள் மரணத்தை தழுவினார்கள். தயவு செய்து நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் யாரும் வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள். வீட்டுக்குள்ளே இருங்கள்.உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.உங்கள் குடு ம்பத்தினரோடு செலவு செய்ய கடவுள் கொடுத்த தருணம் என நினைத்து செயல்ப டுங்கள். கூட்டம் கூடுவது மிகவும் ஆபத்து. கூட்டமாக கூடியதால்தான் இத்தாலியில் ஒரு பெரிய ஆபத்து ஏற்பட்டது. வேதத்தில் ஒரு வசனம் உண்டு என் ஜனமே நீ போய் உன்அறைக்குள்பிரவேசித்து உன்கதவுகளைபூட்டிக்கொண்டு சினம்(கொள்ளை நோய்) கடந்து போகும்மட்டும் உன் வீட்டிற்குள் ஒளித்துக் கொள் என்ற வார்த்தை யின்படி அரசாங்கத்திற்குகீழ்ப்படிந்து நம்மையும்,நமதுகுடும்பத்தையும் அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்வோம். இவ்வாறு அந்த வேண்டுகோளில் கூறியுள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo