Onetamil News Logo

குழந்தையை கடத்திய செவிலியர் அமுதா ;பச்சிளம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக 3-வது நாளாக விசாரணை 

Onetamil News
 

குழந்தையை கடத்திய செவிலியர் அமுதா;பச்சிளம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக 3-வது நாளாக விசாரணை 


நாமக்கல் 2019 ஏப்ரல் 27 ;நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகளை கடத்தி, பிறப்பு சான்றிதழுடன் விற்பனை செய்த வழக்கில் விருப்ப ஓய்வுபெற்ற அமுதா என்ற செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
                                                                                                                                                            குழந்தைகள் விற்பனை குறித்து புகார் எழுந்த நிலையில், விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டார். பணத்திற்கு குழந்தைகளை விற்கும் விருப்ப ஓய்வு பெற்ற செவிலியரின் ஆடியோ வெளியானதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
                                            
 ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், தவறான உறவில் பிறந்த குழந்தைகள் ஆகியவற்றை வாங்கி வந்து, குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்யும் சம்பவம் வெளிப்படையாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கும்பலுக்கு, விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் இடைத்தரகராக செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
                           
குழந்தைகளின் அழகான தோற்றம், கலர் ஆகியவற்றை வைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. ஆண் குழந்தைகளை 4 லட்ச ரூபாய்க்கும், பெண் குழந்தைகளை 3 லட்ச ரூபாய்க்கும் விற்பதாக கூறப்படுகிறது.
                                   
விற்பனை செய்யப்படும் குழந்தைக்கு நாமக்கல் நகராட்சியில் பிறப்பு சான்றிதழும் வாங்கித் தரப்படுவது தெரியவந்துள்ளது. இந்த கும்பல் வெளி மாநிலங்களிலிருந்து குழந்தைகளை திருடி வந்து விற்பனை செய்வதாகவும் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில், குழந்தை விற்பனை கும்பலுக்கு இடைத்தரகராக செயல்படும் பெண், குழந்தை இல்லாத தம்பதியிடம் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
                                                 
அதில், ஓய்வு பெற்ற நர்ஸ் அமுதா என்பவர் பேசுகையில், ஆண்டவன் அருளால் எந்த பிரச்சனையும் இல்லாமல், கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி கொடுத்து வருகிறேன். இதன் காரணமாக, நர்ஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். முன் பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்தால் தான் குழந்தையை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என்று கூறுகிறார்.
குழந்தை வந்ததும் நேரில் வந்து பார்த்து எடுத்துச் செல்லலாம். குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்றாலும் ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கி கொடுக்கிறேன் என்றும் நர்ஸ் அமுதா கூறுகிறார். இந்த ஆடியோ பேச்சு ராசிபுரம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.இதையடுத்து ராசிபுரம் மகளிர் போலீசார் ஓய்வு பெற்ற நர்சிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல்வேறு உண்மைகள் மறைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், குழந்தைகள் விற்பனை தொடர்பாக முதல் கட்ட விசாரணைக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, செவிலியர் அமுதா கைது செய்யப்பட்டுள்ளார்.
ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக 3-வது நாளாக செவிலியர் பர்வீனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தைகள் விற்பனை தொடர்பாக திருச்செங்கோடு, குமாரபாளையம், பவானி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo