Onetamil News Logo

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ  ஏர்வாடியில் ஆர்ப்பாட்டம்

Onetamil News
 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ  ஏர்வாடியில் ஆர்ப்பாட்டம்


நாங்குநேரி 2019 அக்டோபர் 18 ;நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முகாமிட்டு அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில்,அதிமுக பிரமுகர் ஒருவர் அமைச்சரிடம் கேசவநேரி ஜமாத் நிர்வாகிகளை அந்த பகுதியில் நியாய விலை கடை அமைப்பது தொடர்பான கோரிக்கை மனுக்களை அளிக்க  அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மனு அளிக்கச் சென்ற முஸ்லிம் ஜமாத்தினரிடம், தங்களுக்கு வாக்களிக்காத முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஏன் கோரிக்கையை நிறைவேற்ற  வேண்டும்? அதிமுகவுக்கும் முஸ்லிம்களுக்கு என்ன சம்பந்தம் என்பது போல பேசியுள்ளார்.  அதோடு  அந்த மனுவை வாங்க மறுத்ததோடு தங்களுக்கு வாக்களிக்காமல் இப்படி நடத்து கொண்டீர்கள் என்றால், காஷ்மீரில் நடத்து போன்று முஸ்லிம்கள் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என பேசியுள்ளார்.
மேலும், முஸ்லிம்களிடம் தான் மனுவை வாங்க மாட்டேன் என்றும், யாருக்கு வாக்களித்தீர்களோ அவரிடம்  போய் மனுவை கொடுங்கள்  என்று பேசி,  மனு அளிக்கச் சென்ற முஸ்லிம்களை அவமதித்துள்ளார். அமைச்சரின் இந்த செயலை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி நாங்குநேரி தொகுதி சார்பாக ஏர்வாடி கைகாட்டி  முக்கில் கண்டன ஆர்ப்பாட்டம் தொகுதி தலைவர் இம்ரான் அலி தலமையில் நடைபெற்றது.இதில் தொகுதி செயலாளர் முஹம்மது கனி வரவேற்புரை நிகழ்த்தினார் இதில் மாவட்ட செயலாளர் ஹயாத் முஹம்மது , பேட்டை முஸ்தபா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் நூற்றுக்கும் மேற்றப்பட்ட கட்சியில் நிர்வாகிகளும் செயல்வீரர்களும். திரளாக கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முல்லை மஜீத் நாங்குநேரி தொகுதி பொருளாளர் சலாவுதீன்.எஸ்.டி டி.யூ தொழிற்சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக், பாப்புலர் பிரண்ட் மாவட்ட செயலாளர் அமீன், பாப்புலர் பிரண்ட் நாங்குநேரி தொகுதி தலைவர் சாம் சகாப்தீன். ஏர்வாடி நகர தலைவர்  மர்கபா சேக் ஆகியோர் கலந்து கொண்டனர். களக்காடு நகர செயலாளர் ஹாலித் நன்றியுரை கூறினார்...
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo