Onetamil News Logo

நத்தத்தில் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவக்கல்லுரி அமைக்கப்படும்

Onetamil News
 

நத்தத்தில் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்
திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவக்கல்லுரி அமைக்கப்படும்


நத்தம்,2019 ஏப். 13: திண்டுக்கல்  பாராளுமன்ற திமுக வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து நத்தம் பஸ் நிலையம் அருகில் உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து பேசியதாவது.
         பிரதமர் நரேந்திர மோடி கூறிய தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை.  சாதாரண ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் பணம் போடுவதாக கூறி மோடி ஏமாற்றி விட்டார். நாங்கள் வெற்றி பெற்றதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தபடி நீட் தேர்வு ரத்து செய்யப்படும். ஏழை குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.6ஆயிரம் வீதம் வருடத்திற்கு 72ஆயிரம் வழங்கப்படும். நலிவடைந்த விவசாயிகள் நலன் கருதி விவசாயக்கடன்கள் ரத்து செய்யப்படும். மேலும் பாரத பிரதமராக ராகுல்காந்தி பதவி ஏற்கும் காலம் நெருங்கிவிட்டது. 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். நீண்டநாள் கோரிக்கையான  மருத்துவக்கல்லு£ரி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் தடையில்லாமல் கிடைப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைதேர்தலிலும் அனைத்து இடங்களையும் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும். இது தமிழக மக்கள் எடுத்த முடிவாகும்.  மேலும் அனைத்து முதியோர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட வரிச்சுமைகள் குறைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கு ஒருகோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம், மாநில செயற்குழு உறுப்பினர் விஜயன்,  மாவட்ட துணைசெயலாளர் ராஜாமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், வெள்ளைச்சாமி, பேரூர் செயலாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதுருஸ்ஸமான், நிர்வாகிகள் குப்புச்சாமி, தன்ராஜ், ஜெயராஜ், இஸ்மாயில், அப்துல் மஜீது மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo