Onetamil News Logo

மாங்காய் வியாபாரிகளுக்கு இயற்கை முறையில் பழுக்க வைக்கும் முறை குறித்து விழிப்புணர்வு கூட்டம்

Onetamil News
 

மாங்காய் வியாபாரிகளுக்கு இயற்கை முறையில் பழுக்க வைக்கும் முறை குறித்து விழிப்புணர்வு கூட்டம்


நத்தம், 2019 மே 8 ; நத்தம் மற்றும் சாணார்பட்டி பகுதிகளில் மாங்காய் வியாபாரிகளுக்கு இயற்கை முறையில் பழுக்க வைக்கும் முறை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம்  நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கரில் மா விவசாயம் செய்யபட்டு வருகிறது. இங்கு இருந்து வெளிமாநிலங்களுக்கு பல ஆயிரம் டன் கணக்கில் ஏற்மதி செய்யபடுகிறது. இதையொட்டி மா சீசன் ஆரம்பித்துவிடட்டாதால் நத்தம் அருகே வேம்பார்பட்டியில் உள்ள தனியார் மாங்காய் குடோனில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் தோட்டகலைதுறை சார்பில் மா வியாபாரிகளுக்கு இயற்கை வழியில் பழுக்க வைக்கும் முறை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  இதற்கு மாவட்ட நியமண உணவு பாதுகாப்பு அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார்.  அதில் செயற்கை முறையில் கல் வைத்தும்,ஸ்பிரே அடித்தும்  பழுக்க வைக்க கூடாது என வலியுறுத்தபட்டது. தொடர்ந்து இயற்கை முறையில் மாம்பழ சாகுபடி செய்ய வலியுறுத்தியும்,மற்றொரு இயற்கை முறையான எத்திப்பான் வைத்து பழுக்கை வைக்து வியாபாரம் செய்ய வலியுறுத்தபட்டது. தொடர்ந்து இயற்கை முறையில் பழுக்கு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கபட்டது. இதில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஜோதிமணி,ராமகிருஷ்ணன்,சரண்யா மற்றும் தோட்டகலைத்துறை உதவி அலுவலர் ராமசந்திரன் மற்றும்  வணிகர்கள் சங்கம் தலைவர் ஹரிஹரன் உள்ளிட்ட 100க்கும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo