Onetamil News Logo

நத்தத்தில் சுயேட்சை வேட்பாளர் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா

Onetamil News
 

நத்தத்தில் சுயேட்சை வேட்பாளர் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா


நத்தம், ஏப். 13: திண்டுக்கல் பாராளுமன்ற  சுயேட்சை வேட்பாளராக ஆட்டோ சின்னத்தில் அன்புரோஸ் போட்டியிடுகிறார். இவர் நேற்று நத்தத்திற்கு தனது சின்னத்திற்கு வாக்குகள்  சேகரிக்க வந்திருந்தார். அப்போது திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தாங்கள் வேறு இடத்திற்கு சென்று பிரச்சாரம் செய்யுங்கள் என்று கூறினர். திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் வந்து பிரச்சாரம் செய்ய வந்து கொண்டிருக்கிறார். என்று கூறினார்கள். அப்போது சுயேட்சை வேட்பாளர் தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நான் பிரச்சாரம் செய்கிறேன் என்று கூறி அந்த இடத்தை விட்டு போக மறுத்தார். இதனால் இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டு தாக்கப்பட்டதாக தெரிகிறது. அதைதொடர்ந்து சுயேட்சை வேட்பாளர் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது. தனக்கு வழங்கப்பட்ட நேரத்தில்தான் இந்த இடத்தில் நான் பிரச்சாரம் செய்தேன். இந்நிலையில் என்னை தாக்கிவிட்டார்கள். இதற்கு உரிய நியாயம் எனக்கு கிடைக்க வேண்டும். என்று கூறினார். அதன் பிறகு காவல் துறையினர் சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்தனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo