Onetamil News Logo

நத்தம் - மேட்டுபட்டியில் 1000 வருட பழமைவாய்ந்த கதிர்நரசிங்கப்பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

Onetamil News
 

நத்தம் - மேட்டுபட்டியில் 1000 வருட பழமைவாய்ந்த கதிர்நரசிங்கப்பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா



நத்தம்  2019 ஏப்ரல் 2 ; நத்தம் - மேட்டுபட்டியில் 1000 வருட பழமைவாய்ந்த கதிர்நரசிங்கப்பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள மேட்டுபட்டி கதிர்நரசிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலனாது 1000ஆண்டு பழமை வாய்ந்தாகும். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் விழா  29ம் தேதியன்று காலையில்; யாகசாலை அமைக்கப்பட்டு பகவத் அனுக்வீரு. மகா சங்கல்பம் முதல் காலை பூஜையுடன் தொடங்கியது. பின்னர் 31ம் தேதி இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தது. 1ம் தேதி மூன்றாம் கால பூஜை நடந்தது.  
     இதை தொடர்ந்து நேற்று நான்காம் கால பூஜையுடன் நடைபெற்றது. தொடந்து  காசி. இராமேஸ்வரம். கங்கை. அழகர்கோவில். காவிரி போன்ற புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் நிரம்பிய குடங்கள் வைக்கப்பட்டிருந்தது. இப்புனித தீர்த்தக்குடங்கள் மேளதாளம் முழங்க கோயிலை சுற்றி வந்தது. பின்னர் கோயிலின் உச்சியில் உள்ள கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து வேத மந்திரங்கள் முழங்கிய பொழுது கருடன் வட்டமிட்டதை தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குலவையிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைகள் நடந்தது. அப்போது பக்தர்களுக்கு புனித நீர் மற்றும் பூஜை மலர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்டவர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.இதில் நரசிம்மன் ராஜசிம்மன் பரம்பரை அறங்காவலர்கள் திருக்கோயில் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் ஒன்றிய செயலாளர் விஜயன் அதிமுக அம்மா பேரவை இணைச்செயலாளர் கண்ணன் ஒன்றிய செயலாளர் காமராசு கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo