Onetamil News Logo

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா 10 ஆயிரம் பேர் பூக்குழி இறங்கினர் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்

Onetamil News
 

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா 10 ஆயிரம் பேர் பூக்குழி இறங்கினர்
ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்     
   


நத்தம்,  2019 பிப்ரவரி 26 ; திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் திருவிழாக்களில் மிக முக்கியமானது மாசி பெருந் திருவிழாவாகும். இந்த விழா கடந்த 11ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தமாடி 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்து காப்பு கட்டி 15நாள் விரதம் தொடங்கினர். இதைதொடர்ந்து வந்த ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமை இரவுகளில் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்தது.
      தொடர்ந்து அம்பாளுக்கு மஞ்சள் பாவாடை எடுத்து வந்து சாத்தப்பட்டது. பின்னர் இரவு அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காவடி வகையறாக்கள் எடுத்து வருதல் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலையில் பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், உடம்பெல்லாம் சகதியை பூசிக் கொண்டு சேத்தாளி வேஷம் போடுதல், கரும்பு தொட்டில் கட்டி குழந்தையுடன் கோவிலை வலம் வருதல்,அங்கபிரதட்சனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
     தொடர்ந்து கோவில் முன்பு கழுகு மரம் ஊன்றுதல், அதன்பின்னர் கழுகுமரம் ஏறுதல் நடந்தது. அதைதொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் சிறியவர், பெரியவர், பெண்கள் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று இறங்கினர். இரவு கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் விடப்பட்டது. இந்த விழாவில் தென் மாவட்ட பகுதிகளிலிருந்தும், சுற்றுவட்டாரங்களிலிருந்தும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று காலை அம்பாள் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து இரவு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்து நாளை காலையில் கோவிலைச் சென்று இருப்பிடம் சேரும். இத்துடன் மாசி திருவிழா நிறைவு பெறும்.
      இந்த திருவிழா ஏற்பாடுகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்கோவில் பூசாரிகள் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர். பொதுசுகாதாரம், குடிதண்ணீர் வசதி ஏற்பாடுகளை நத்தம் பேரூராட்சி நிர்வாகத்தினர், துப்புரவு பணியாளர்கள் செய்திருந்தனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் 200க்கும்மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர். அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo