Onetamil News Logo

தேசிய மீனவர் கட்சி  (NISHAD) கடலார் தலைமையில் கிராம சந்திப்பு மற்றும் தேசிய மீனவர் ஒருங்கிணைப்பு கூட்டம்   

Onetamil News
 

தேசிய மீனவர் கட்சி  (NISHAD) கடலார் தலைமையில் கிராம சந்திப்பு மற்றும் தேசிய மீனவர் ஒருங்கிணைப்பு கூட்டம்     


 பழவேற்காட்டில் தேசிய மீனவர் ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் மீனவர் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
                 திருவள்ளுவர் மாவட்டம், பழவேற்காட்டில் தேசிய மீனவர் கட்சி  (NISHAD) சார்பில்  கடலார் தலைமையில் கிராம சந்திப்பு மற்றும் தேசிய மீனவர் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. 
   கடலும் கடற்கரையும் கடலோடி மீனவனுக்கே..! ஆறும்,ஏரியும் அதை பயன்படுத்தும் பாரம்பரிய மீனவனுக்கே..!! என  முழக்கங்கள் இடப்பட்டன.
              மீனவர் அரசியல் செய்வோம் வாருங்கள்..!! என முன்மொழிந்தார்கள்.‌ இதில் திருள்ளுவர் மாவட்டத்தில் உள்ள மீனவ பல்வேறு கிராம ஊர் நிர்வாகிகள் பங்கு பெற்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொன்டனர். அதன் அடிப்படையில் பக்கிரி @கிரி அவர்களை தற்காலிக மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.‌மேலும்  இதில் நொச்சி குப்பம் மீனவர் பிரச்சனை மற்றும் நான்கு மீனவர்கள் விடுதலை செய்ய தீர்மானம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கத்துக்கு அரசு தடை விதிக்கவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
        அதைத்தொடர்ந்து கடலில் பேனா சிலை மற்றும் கடலில் காற்றாலை திட்டங்களை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo