Onetamil News Logo

தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்ற தண்டுபத்து - சுதந்திர நகர் மாணவிக்கு இளஞ்சிறுத்தைகள் ஊக்கப்பரிசு

Onetamil News
 

தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்ற தண்டுபத்து - சுதந்திர நகர் மாணவிக்கு இளஞ்சிறுத்தைகள் ஊக்கப்பரிசு


உடன்குடி  2020 அக்டோபர்  1: தூத்துக்குடி மாவட்டம்,உடன்குடி ஒன்றியத்திற்குட்பட்ட  தண்டுபத்து - சுதந்திர நகர் அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி மாணவி இந்துமதி 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 8-ஆம் வகுப்பு தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். அம்மாணவியின் வீட்டிற்கு சென்று இளஞ்சிறுத்தைகள் சார்பில் ஊக்கப்பரிசு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். 
திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றதால் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு படித்து முடிக்கும் வரை மாதந்தோறும் 1000ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் முற்போக்கு மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் இரகுவரன், கட்சியின் உடன்குடி ஒன்றிய துணைச்செயலாளர் விஜயன், இளஞ்சிறுத்தைகளின் உடன்குடி ஒன்றிய அமைப்பாளர் முத்துச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo