Onetamil News Logo

பல ஆண்களின் கண்களுக்கு முன்னால் ஆடைகளைக் களைந்த முதல்நாள் ‘‘நிர்வாண மாடலிங்  லட்சுமி பேட்டி 

Onetamil News
 

பல ஆண்களின் கண்களுக்கு முன்னால் ஆடைகளைக் களைந்த முதல்நாள் ‘‘நிர்வாண மாடலிங்  லட்சுமி பேட்டி 


மும்பாய் 2018 ஏப்ரல் 02 ;
மும்பையில் உள்ள சர் ஜே.ஜே. நுண்கலைக் கல்லூரியில் சுமார் 30 ஆண்டுகாலமாக நிர்வாண மாடலாக இருப்பவர் லட்சுமி . பல்வேறு கஷ்டங்களைத் தாண்டி நிர்வாண மாடலிங்கில் பெயர் பெற்றிருப்பதாக சொல்கிறார்,இந்த லட்சுமி.
அவர் கூறியதாவது..‘‘என் மகனுக்கு மூன்று வயதானபோது என் கணவர் இறந்துவிட்டார். அப்போது ஏதாவது ஒரு வேலைக்குப் போகவேண்டிய நிர்பந்தத்தில் நான் இருந்தேன். நான் வேலைக்காக என் அத்தை ஒருவரை தொந்தரவுபடுத்திக்கொண்டே இருப்பேன். அவரும், பார்க்கலாம் பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டிருப்பார். ஒருநாள் மதியம், அவர் பணிபுரியும் ஜே.ஜே. நுண் கலைக் கல்லூரிக்கே சென்றுவிட்டேன். அங்குதான் அவர், ‘அனாடமி’ மாடலாகப் பணிபுரிவதை அறிந்தேன். அப்போது அவர், ‘வேலை வேலை என்கிறாயே.... இந்த வேலை பார்க்கிறாயா?’ என்று கேட்டார். எனது இரு குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்த நான், எனது தயக்கத்தையும் கூச்சத்தையும் உதறி உடனே சரி சொல்லிவிட்டேன்.
பல ஆண்களின் கண்களுக்கு முன்னால் நான் என் ஆடைகளைக் களைந்த முதல்நாள் எனக்கு ரொம்ப நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் மிகவும் தயங்கித் தயங்கி அதைச் செய்தேன். இடையிடையே, உடைந்து அழவும் ஆரம்பித்தேன். ஆனால் அங்குள்ள பேராசிரியர்களும் மாணவர்களும் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். இன்று, உலகிலேயே மிகச் சிறந்த வேலையை நான் பார்க்கிறேன் என்று பெருமையோடு சொல்வேன்’’ என்கிறார் லட்சுமி.
இவர் மாடலாக பணிபுரிந்த கட்டிடத்தில் சமீபத்தில் இவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. ‘‘பெரிதும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் ஒரு வேலையில் நான் பல ஆண்டுகளைக் கழித்துவிட்டேன். கடைசியில், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இந்தத் தருணத்துக்காகத்தான் நான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேனோ என்னவோ!’’ என்கிறபோது, லட்சுமியின் விழியோரம் நீர் கசிகிறது.
இன்று லட்சுமியின் கதை, மராத்தி மொழியில் திரைப்படமாகத் தயாராகிறது. ஸீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரவி ஜாதவ் இயக்கும் இப்படம், வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகிறது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo