Onetamil News Logo

குடும்ப வன்முறை பிரிவின் கீழ் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி-க்கு எதிராக கைது வாரண்ட் ;மனைவி புகார் 

Onetamil News
 

குடும்ப வன்முறை பிரிவின் கீழ் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி-க்கு எதிராக கைது வாரண்ட் ;மனைவி புகார் 


கொல்கொத்தா,2019 செப் 03 ;  குடும்ப வன்முறை பிரிவின் கீழ் கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.
2018-ம் ஆண்டின் ஆரம்பகாலத்தில் முகமது ஷமி-யின் மனைவியான ஹசின் ஜஹான், தனது கணவர் மற்றும் கணவரின் சகோதரர் மீது குடும்ப வன்முறை பிரிவின் கீழ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதன் பின்னர் கணவர் முகமது ஷமி மீது ஹசின் ஜஹான் ஊடகங்களில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இருவரும் பரஸ்பரம் வார்த்தை போர்களில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பான வழக்கு மேற்குவங்கத்தின் அலிபோர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் முகமது ஷமி மற்றும் அவரின் சகோதரர் ஹசித் அகமது ஆகியோர் மீது கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இருவரும் 15 நாட்களுக்குள் சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்படுள்ளது.
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரிலும் சரி, தற்போது நடைபெற்று வரும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சரி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருபவர் முகமது ஷமி.
ஜமைக்காவில் தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷமி விளையாடு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo