Onetamil News Logo

வாட்ஸ்-அப் க்கு பூட்டு ;வதந்தி பரவுவதை தடுக்க ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் தகவல் அனுப்ப முடியாதது  

Onetamil News
 

வாட்ஸ்-அப் க்கு பூட்டு ;வதந்தி பரவுவதை தடுக்க ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் தகவல் அனுப்ப முடியாதது  



புதுடெல்லி,  2018 ஜூலை 21; வதந்தி பரவுவதை தடுக்க ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் தகவல் அனுப்ப முடியாத வகையில் புதிய கட்டுப்பாட்டை வாட்ஸ்-அப் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் வாட்ஸ்-அப் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் 20 கோடிப் பேர் உள்ளனர். இவர்களில் சிலர், இந்த வலைத்தளத்தில் உள்ள வசதியை பயன்படுத்தி வதந்தி பரப்புவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். ஒரே நேரத்தில் ஏராளமானோருக்கு வாட்ஸ்-அப்பில் தகவலை அனுப்ப முடியும் என்பதால் இதுபோன்ற வதந்திகள் உயிர்ப்பலி வாங்குவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
குழந்தை கடத்தும் கும்பல், பசு கடத்தும் கும்பல் என வதந்திகள் பரவி நாடு முழுவதிலும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 20-க்கும் அதிகமான அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் மத்திய அரசு, வதந்திகள் பரவுவதை தடுக்காமல் அதை வேடிக்கை பார்த்தால் நீங்கள் சட்ட ரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து வாட்ஸ்-அப் நிறுவனம் வதந்தி பரவுவதை தடுக்க நேற்று புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.
இதுபற்றி அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவில் வாட்ஸ்-அப் மூலம் புகைப்படங்கள், வீடியோ காட்சிகள், தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. வாட்ஸ்-அப் தகவலை ஒரே நேரத்தில் பல தனிநபர்களுக்கு பகிர்வதை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.
சோதனை முயற்சியாக 5 பேருக்கு மட்டுமே வாட்ஸ்-அப்பில் தகவல் பகிர்வதை நடைமுறைப்படுத்தி உள்ளோம். மேலும் மீடியா மெசேஜூக்கு அடுத்துள்ள குவிக் பார்வர்டு பட்டனை அகற்ற இருக்கிறோம் 
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.
இதேபோல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின்போது வாட்ஸ்-அப் தவறாக பயன்படுத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுப்போம் என்று இந்திய தேர்தல் கமிஷனிடம் அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
அண்மையில் பிரேசில், மெக்சிகோ நாடுகளின் தேர்தல்களின்போது, பயன்படுத்தப்பட்டது போன்ற ‘வெரிபிகாடோ மாடல்’ என்னும் முறையை பயன்படுத்தி போலி செய்திகள் பரவுவதை தடுக்க இருப்பதாக தேர்தல் கமிஷனிடம் அந்நிறுவனம் கூறி இருக்கிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo