Onetamil News Logo

தடை செய்யப்பட்ட கள்ளச்சாரயத்தை குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு

Onetamil News
 

தடை செய்யப்பட்ட கள்ளச்சாரயத்தை குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86 ஆக அதிகரிப்பு 



உத்திரபிரதேசம் 2019 பிப்ரவரி 10 ; உத்திரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் பாலுப்பூர் கிராமத்தில் நடைபெற்ற 13-ம் நாள் துக்கநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏரளாமானோர் சென்றிருந்தனர். உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்களும் துக்க நிகழ்வில் பங்கேற்றனர். அன்றிரவு விருந்து வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ‘ஹூச்’ எனக்கூறப்படும் தடை செய்யப்பட்ட கள்ளச்சாரயத்தை சிலர் அருந்தியுள்ளனர்.
இந்த சாராயத்தை குடித்த சில மணி நேரங்களில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களை மீட்ட உறவினர்கள், உத்தரபிரதேச மாநிலம் சகாரான்பூர், பாலுப்பூர் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். ஆனால், பலரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 7-ம் தேதி முதல் நேற்றிரவு வரை படிப்படியாக 34 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதுவரை கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்திருக்கிறது.
கள்ளச்சாரயத்தை விநியோகம் செய்த நபர் பிந்து என்பது தெரியவந்துள்ளது. அவர், 30 பைகளில் கள்ளச்சாராயத்தை கொண்டு வந்துள்ளார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக 10 போலீசார் மற்றும் 4 கலால் துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று காரான்பூர் மாவட்ட கலெக்டர் அலோக் பாண்டே தெரிவித்துள்ளார்.
மேலும் உத்தரகாண்ட் மாநில அரசு 13 கலால் துறை அதிகாரிகள், 15 போலீசாரை சஸ்பெண்ட் செய்துள்ளது. மொத்தமாக 2 மாநிலத்தைச் சேர்ந்த 25 கலால் துறை அதிகாரிகள், 30 போலீசார் என, 65 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம், வடமாநிலங்களில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாரயம் விற்றது தொடர்பாக, 31 பேரை உத்தரகாண்ட் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் எனவும் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo