Onetamil News Logo

ஜவஹர் சுரங்க பாதை அருகே கடுமையான பனிப்பொழிவு மற்றும் பல நில சரிவுகள் ;ராணுவ வீரர்கள் பரிதவிப்பு 

Onetamil News
 

ஜவஹர் சுரங்க பாதை அருகே கடுமையான பனிப்பொழிவு மற்றும் பல நில சரிவுகள்;ராணுவ வீரர்கள் பரிதவிப்பு 


ஜம்மு மற்றும் காஷ்மிர் 2018 நவ 4; ஜம்மு மற்றும் காஷ்மீரின் தேசிய நெடுஞ்சாலையில் ஜவஹர் சுரங்க பாதை அருகே கடுமையான பனிப்பொழிவு மற்றும் பல நில சரிவுகள் ஏற்பட்டன.  இதனால் தரையில் ஓர் அடிக்கும் கூடுதலாக பனி படர்ந்திருந்தது.
இந்த நிலசரிவால் சுரங்க பாதைக்கு மறுபுறம் பயணிகளின் வாகனங்கள் சிக்கி தவித்தன.  தகவல் அறிந்து மீட்பு பணிகள் தொடங்கின.  இதனை அடுத்து 4 பேருந்துகள் உள்பட பல தனியார் வாகனங்கள் பயணிகளை மீட்க அனுப்பப்பட்டன.அனைத்து மீட்கப்பட்ட பயணிகளும் பனிஹல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு முகாம்கள், ஓட்டல்கள் மற்றும் மத தலங்களில் தங்க வைக்கப்பட்டனர்.  இதில் ஜம்மு நோக்கி சென்ற பாதுகாப்பு படையினரின் வாகனமும் சிக்கி கொண்டது.  அதில் இருந்து வீரர்கள் மீட்கப்பட்டனர்.  அதன்பின் அவர்கள் பனிஹல் நகரில் உள்ள ராணுவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo