Onetamil News Logo

வருகிற 14-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரை பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் நாடு முழுவதிலும் 20,844 கிராமங்களுக்கு சென்று ; தலித் மற்றும் பழங்குடி வகுப்பினரின் குடும்பத்தினருடன் ஒரு நாள் தங்கி இருக்க உத்தரவு 

Onetamil News
 

வருகிற 14-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரை பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் நாடு முழுவதிலும் 20,844 கிராமங்களுக்கு சென்று ; தலித் மற்றும் பழங்குடி வகுப்பினரின் குடும்பத்தினருடன் ஒரு நாள் தங்கி இருக்க உத்தரவு 


 
புதுடெல்லி 2018 ஏப்ரல் 6 ; பிரதமர் மோடி தலைமையில், பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில்  நடந்தது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற முடக்கத்தை கண்டித்து வருகிற 12-ந்தேதி பா.ஜனதா எம்.பி.க்கள் அவரவர் தொகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.  இதுபற்றி நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:- 
பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி நாடாளுமன்ற கூட்டத் தொடர் வீணானதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்பதை சுட்டிக் காண்பித்தார். மேலும் பா.ஜனதா மக்களை ஒருங்கிணைக்க முயன்றால் காங்கிரஸ் அவர்களை பிரித்து வைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த எதிர்மறை செயல்பாட்டின் காரணமாகத்தான் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுமையாக முடங்கிப்போனதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதை கண்டிக்கும் விதமாக வருகிற 12-ந்தேதி பா.ஜனதா எம்.பி.க்கள் அவரவர் தொகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அப்போது காங்கிரஸ் நாடாளுமன்றத்தை முடக்கியது குறித்து விரிவாக மக்களிடம் விளக்கப்படும். தலித்துகளின் போராட்டத்துக்கு மத்திய அரசுதான் காரணம் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று எம்.பி.க்களிடம் மோடி தெரிவித்தார்.
இதையொட்டி அம்பேத்கர் பிறந்தநாளான வருகிற 14-ந்தேதி முதல் மே 5-ந்தேதி வரை பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் நாடு முழுவதிலும் 20,844 கிராமங்களுக்கு சென்று அங்குள்ள தலித் மற்றும் பழங்குடி வகுப்பினரின் குடும்பத்தினருடன் ஒரு நாள் தங்கி இருக்கவேண்டும் எனவும் அவர்களின் நலன்களுக்காக மத்திய அரசு மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo