மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில் நுட்ப கருத்தரங்கு!
தூத்துக்குடி 2023 மார்ச் 27; தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 'காந்தம்-2023' என்ற தலைப்பில் மின்னணு மற்றும் தொடர்பு துறை மற்றும் மின் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் எபனேசர் பிரவின் வரவேற்புரையாற்றினார். கல்லூரி இயக்குநர் பேராசிரியர் ஜார்ஜ் கிளிங்டன் மற்றும் முதல்வர் முனைவர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர் உதவி செயற்பொறியாளர், முனைவர் பிறைசூடி, தூத்துக்குடி அனல் மின் நிலையம் தலைமை தாங்கினார். பின்னர் நிகழ்ச்சிகள் காகித விளக்கக்காட்சி, திட்ட கண்காட்சி, ரோபோ ரேஸ் மற்றும் இணைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 3 சிறந்த அறிக்கைகள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டன. கல்லூரியின் பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆய்வகத்தில் ப்ராஜெக்ட் எக்ஸ்போ நடைபெற்றது.இதில் சிறந்த இரண்டு திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. பேராசிரியர் ரீகன் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் அருள் ராஜன், ஆண்டனி லிவிங்ஸ்டன் மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். இந்த கருத்தரங்கில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.