Onetamil News Logo

நட்டாத்தி ஊராட்சியில் நலிவுற்ற 450 குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண உதவி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார்.

Onetamil News
 

நட்டாத்தி ஊராட்சியில் நலிவுற்ற 450 குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண உதவி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார்.


சாயர்புரம் 2020 மே 31 ;சாயர்புரம் அருகே நட்டாத்தி ஊராட்சியில் நலிவுற்ற 450 குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண உதவி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே நட்டாத்தி ஊராட்சியில் நலிவுற்ற 450 குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, பருப்பு போன்றவற்றை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி ஊராட்சியில் பட்டாண்டி விளை, முள்ளன் விளை, குமாரபுரம் ஆகிய கிராமங்களைச் சார்ந்த 450 குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று  (31.05.2020) நட்டாத்தி ஊராட்சி மன்ற தலைவர் சுதா கலா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து துணைத் தலைவர் எஸ்.வி.பி.எஸ்.பண்டாரம், ஸ்ரீவைகுண்டம் யூனியன் துணை சேர்மன் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ தனது சொந்த செலவில்  பட்டாண்டி விளை, முள்ளன் விளை, குமாரபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நலிவுற்ற 450 குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண உதவியாக தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு போன்றவற்றைை வழங்கினார். அப்போது மாவட்ட கவுன்சிலர் அழகேசன், வார்டு உறுப்பினர்கள் சரோஜா, சுப்புலட்சுமி, பண்டாரம் மற்றும் அதிமுக கிளைச் செயலாளர் செல்வக்குமார், பெஸ்கி, குமாரபுரம் தங்கவேல் உட்பட பலர் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo