நாசரேத் நகர வணிகர்கள் சங்க 20வது ஆண்டு விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி 2020 நவம்பர் 29 ; தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஜோதி மஹாலில் இன்று நடைபெற்ற நாசரேத் நகர வணிகர்கள் சங்க 20வது ஆண்டு விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் நகர வணிகர்கள் சங்கத்தின் 20வது ஆண்டு விழா இன்று நாசரேத்தில் உள்ள ஜோதி மஹாலில் நடைபெற்றது. இந்த விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் ஒரு நகரம் எப்படிப்பட்ட நகரமாக இருக்க வேண்டும் அல்லது இருக்கின்றது என்பதை காட்டுவதில் முக்கியபங்கு அங்கு இருக்ககூடிய வியாபாரிகள் தான் என்றும், போக்குவரத்திலிருந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரை நமக்கு முறையாக தகவல் சொல்லி ஒத்துழைப்பு கொடுப்பவர்களும் வியாபாரிகள்தான் என்றும், தங்களது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்துங்கள். நீங்கள் வாகனத்தில் வெளியே செல்லும் போது தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியுங்கள் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். காவல்துறை எப்போதும் வியாபாரிகளின் நண்பர்கள்தான் என்றும் காவல்துறை உங்களுக்கு எப்பொழுதும் ஒத்துழைப்பு தரும் என்று தெரிவித்தார். மேலும் வியாபாரிகள் தங்களது கடைகளில் மூன்றாவது கண் எனப்படும் CCTV கேமரா பொருத்தி குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்வின் போது சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதீஷ், நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர் அனந்த முத்துராமன் உள்ளிட்ட காவல்துறையினரும் நாசரேத் நகர வணிகர் சங்க தலைவர் திலகராஜ், செயலாளர் செல்வன், ஜான் மற்றும் வணிகர் சங்க உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.