Onetamil News Logo

8 வழிச்சாலை தேவையா? ;சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் 14க்கும்  மேற்பட்ட தாலுகா, 159க்கும் மேற்பட்ட கிராம மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரம்?

Onetamil News
 

 8 வழிச்சாலை தேவையா? ;சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் 14க்கும்  மேற்பட்ட தாலுகா, 159க்கும் மேற்பட்ட கிராம மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரம்?


சென்னை 2020 செப் 14 ;சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் 14க்கும்  மேற்பட்ட தாலுகா, 159க்கும் மேற்பட்ட கிராம மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரங்களையும், வாழ்வியல் சூழல்களையும், விவசாய நிலப்பயிர்களையும், கஞ்சமலை, கவுத்திமலை, வேடியப்பன் மலை உள்ளிட்ட கனிமவள மலைகள், குன்றுகள், ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள், வனவிலங்கு உயிர்வாழ்விடங்கள் என ஒட்டு மொத்த வாழ்வியல்  உயிர்ச்சூழலை பேரழிவிற்கு ஆட்படுத்தி மத்திய மாநில அரசுகள் சதித்திட்டங்களுடன் சேலம்- சென்னை வரையிலான எட்டு வழிச் சாலை திட்டமிட்டமானது பல்வேறு கட்ட போராட்டங்கள், உயிரிழப்புகள் இடையில் செயல்படுத்த முனைந்துள்ளது.
ஜின்டால் கோ போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கனிம வள எடுப்பிற்காகவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் போக்குவரத்திற்காகவும் மட்டுமே திட்டமிட்டு இவ்வாறு மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து எட்டுவழி சாலை திட்டமானது வகுக்கப்பட்டு வருகிறது. மேலும் 2554 ஹெக்டர் விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதோடு மட்டுமில்லாது அதனோடு ஒன்றிணைந்த பசுமை வழி காடுகள், மலைகள், குன்றுகள், ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டு வருகிறது. விவசாய உற்பத்திகள் சிறந்து விளங்கும் சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தின் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் முழுமையாக அழிக்கப்பட்டு வருகிறது.
மத்திய மாநில அரசுகள் வளர்ச்சி திட்டங்கள் எனும் பெயரில் கார்ப்பரேட் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த தமிழக விவசாய நிலங்களையும், பசுமைக் காடுகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காவு கொடுக்க முனைந்து உள்ள இச்சூழலை உணராது ஆளும்கட்சிகள் இத்திட்டற்கான மதிப்பீட்டு தொகையான ரூ 10,000 கோடிக்கான கமிஷன்களை கணக்கில் கொண்டு வாய்மூடி மௌனம் கொள்வது என்பது கண்டனத்திற்குரியது.
கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காவல்துறையின் அதிகார மீறல்கள், அடக்குமுறைகள், பொய்வழக்குகள் போன்ற பல்வேறு கட்ட அரசுகளின் அடக்குமுறைகளை தாண்டி  காஞ்சிபுரம் மாவட்டத்தின் 42 கிராம மக்கள், திருவண்ணாமலை மாவட்டத்தின் 72 கிராம மக்கள், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களின் 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சேலம் மாவட்டத்தின் 18 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் செயல்படுத்த முனையும் எட்டுவழிச் சாலை (பசுமை அழிப்பு)  திட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய அளவிலான தன்னெழுச்சி போராட்டங்களை முன்னெடுத்து தமிழக மக்களுக்கு எதிரான இத்தகைய பேரழிவுத்திட்டங்களை தடுக்க முன்வர வேண்டும்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo