Onetamil News Logo

2 ஹெக்டேர் நிலத்துக்கு குறைவாக வைத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை, 3 தவணைகளாக வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு 

Onetamil News
 

2 ஹெக்டேர் நிலத்துக்கு குறைவாக வைத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை, 3 தவணைகளாக வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு 


புதுடெல்லி  2019 பிப்ரவரி 1 ; இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்
2 ஹெக்டேர் நிலத்துக்கு குறைவாக வைத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை, 3 தவணைகளாக வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 20ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்தார். அப்போது, விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அவர் அறிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், " வேளாண் துறையில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, 2 ஹெக்டேர் நிலப்பரப்புக்குக் குறைவாக வைத்திரு்கும் விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை ஆண்டுக்கு 3 தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும் என்றார்.
இந்த நிதிஉதவி அனைத்தும் மத்திய அரசால் மட்டும் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை அனைத்தும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்துக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதி 2019 20-ம் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு உணவு தானியங்களை விலை குறைவாக வழங்குவதற்காக 2018-19-ம் ஆண்டில் ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.
2018 19ல் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் 11.68 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2022 ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு 2 சதவீத வட்டி சலுகை அளிக்கப்படும்.கடனை உரிய நேரத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு மேலும் 3 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo