Onetamil News Logo

பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி காலமானர் அவரது வாழ்க்கை வரலாறு

Onetamil News
 

பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி காலமானர் அவரது வாழ்க்கை வரலாறு


புதுடெல்லி 2019 ஆகஸ்டு 24 ; முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் டெல்லியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.    

அருண் ஜெட்லி பதினாறாவது மக்களவையின் அமைச்சரவையில், நிதியமைச்சராகவும், பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தவர் ஆவார்.
இவர் பாதுகாப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞரும் ஆவார். பதினைந்தாவது மக்களவையில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆய அமைச்சரவையில் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2014 பொதுத் தேர்தலில், அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர், படைத்தலைவர் அமரிந்தர் சிங்கிடம் தோற்றார்.
பஞ்சாபி இந்து பிராமணக் குடும்பத்தில் வழக்கறிஞர் மகராசு கிசன் ஜெட்லிக்கும் இரத்தன் பிரபா ஜெட்லிக்கும் மகனாகப் பிறந்தார். தமது பள்ளிக்கல்வியை தில்லியின் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல் 69 வரை பயின்றார். பொருளியல் இளங்கலைப் பட்டத்தை சிறீராம் பொருளியல் கல்லூரியில் 1973இல் பெற்றார். 1997இல் சட்டப்படிப்பை தில்லி பல்கலைக்கழகத்தில் முடித்தார். தமது மாணவப் பருவத்தில் கல்வித்திறன் மற்றும் பிற கல்விசாரா செயற்பாடுகளுக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். 1974இல் தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.
2018 மே 14 இல் அருண் ஜெட்லி சிறுநீரகக் கோளாறுகளுக்காக எயிம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரகக் கொடை சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர் நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டார். 2019, ஆகஸ்ட் 24 மதியம் 12:07 மணிக்கு இவர் எயிம்ஸ் மருத்துவமனையில் தனது 66-வது அகவையில் காலமானார்.ஜெட்லி மே 24, 1982இல் சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo