Onetamil News Logo

புதுடெல்லி இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2019-ல் எளிதாக வணிகம் செய்தல்

Onetamil News
 

புதுடெல்லி இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2019-ல் எளிதாக வணிகம் செய்தல்


புதுடெல்லி 2019 நவம்பர் ,வெள்ளி 15 ;புதுடெல்லி இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2019-ல் இன்று (15.11.2019) """"தமிழ்நாடு நாள் விழாவை""  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு  குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்கள். 
புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2019-ல் """"தமிழ்நாடு நாள் விழாவை"" இன்று (15.11.2019)  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு அவர்கள் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்கள்.
புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், ஆண்டுதோறும் இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. 39-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2019, நவம்பர் 14ஆம் தேதி தொடங்கப்பட்டு, வரும் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இப்பொருட்காட்சியில் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள், இந்திய யூனியன் பிரதேசங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
நடப்பாண்டில், இப்பொருட்காட்சிக்கான கருப்பொருள் """"எளிதாக வணிகம் செய்தல்""  என்பதாகும். 
தமிழ்நாடு இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களுள் ஒன்றாகும். நாட்டின் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாக திகழ்வதுடன், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.4ரூ பங்களிப்பையும் தமிழ்நாடு அளிக்கிறது. தொழில்கள் பலவும் உயர்ந்து சிறக்கும் தமிழ்நாடு இந்தியத் தொழில் துறையின் உந்து சக்தியாகவும், நாட்டின் அதிகளவிலான தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களைக் கொண்ட மாநிலமாகவும் திகழ்கிறது. ஆசியாவிலேயே, தொழில் முனைவோர் மிகவும் விரும்பும் மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. சமீப காலங்களில் வெளிவந்த பல்வேறு சுதந்திரமான ஆய்வுகள் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. மேலும், """"இந்தியா டுடே"" இதழில் வெளியான 2018-ஆம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கான தர வரிசையில், ஒட்டுமொத்தச் செயல்திறன் வரிசையில் தமிழ்நாடு முதல் இடம் பெற்றுள்ளது.
சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 அடைந்த சிறப்பான வெற்றியே, தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் மேலும் சிறப்புப் பெற்று வரும் தமிழ்நாட்டின் தொழில் சூழலுக்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டு நிகழ்வு, உலகெங்கிலுமிருந்தும் தொழில் முதலீட்டாளர்களை ஈர்த்தது. குறிப்பாக ஜப்பான், தென்கொரியா, தைவான், பிரான்சு, அமெரிக்கா, ஜெர்மனி,  பின்லாந்து போன்ற நாடுகளில் இருந்து தொழில் முனைவோர் பலர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10.5 இலட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில்  ரூ.3,00,431 கோடி அளவிற்கான  தொழில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்குச் சென்று, மொத்தம் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதன் மூலமாக 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் வணிகம் செய்யும் நடைமுறைகளை எளிதாக்க மேற்கொண்டு வரும் பணிகளை, ஒருங்கிணைக்கும் முகமையாக, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தொழில் துவங்குவதை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம் 2018ன்படி, தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம், ஒற்றைச் சாளர முறையில் ரூ.10 கோடிக்கு மேல் முதலீடுகள் கொண்ட தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் வழங்க வழிவகை செய்யும் முகமை ஆகும்.
தொழில் துவங்குவதற்கான பல்வேறு அரசுத் துறைகளின் உரிய அனுமதிகளை, ஒற்றைச் சாளர முறையில் வழங்கிட, தனி இணையதளச் சேவை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தொழில் வழிகாட்டி நிறுவனம் முதலீட்டுக்கான முடிவுகளை எடுக்கத் தேவையான தொழில்நுட்ப மனித வளம், பொருளாதாரக் குறியீடுகள், துறை விவரங்கள், நில இருப்புகள் மற்றும் இதனைச் சார்ந்த அரசுத் துறைகள் ஆகிய சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது. இதற்குண்டான விவரங்கள், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் வலைத்தளத்தில் பிரெஞ்சு, ஜப்பானிய, கொரிய மற்றும் சீன மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, தொழில் ஒழுங்குமுறை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை எளிமையாக்கவும், தகவல் தொழில்நுட்ப மூலம் நிர்வாகத்தை எளிமைப்படுத்துதல், பொறுப்புத்தன்மை, வெளிப்படைத் தன்மை மற்றும் நிர்வாகத் திறமையை மேம்படுத்துதல் போன்ற பல தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசு 2018-ஆம் ஆண்டில், வணிகம் செய்தலை எளிதாக்குதல் தொடர்பான 369 சீர்திருத்தங்களில், 354 சீர்திருத்தங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்து, சீர்திருத்த அமலாக்கத்தில் 95.9ரூ மதிப்பெண்களை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக, தமிழ்நாடு 334.60 (90.4ரூ) மதிப்பெண்களைப் பெற்று ‘சாதனையாளர் மாநிலங்கள்’ பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தப் பொருட்காட்சியில், தமிழ்நாடு அரங்கில் செய்தி-மக்கள் தொடர்புத் துறை,  தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், தொழில் மற்றும் வணிகத் துறை, வேளாண்மைத் துறை, தமிழ்நாடு மாநில வேளாண்மை வணிக வாரியம், தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சுற்றுலாத் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு கைத்தறி உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் ஆகிய அரசு மற்றும் அரசு சார்புத் துறைகள் பங்கேற்று தங்கள் துறையின் சாதனைகள், திட்டங்கள் மற்றும் செயல்விளக்க மாதிரிகளைச் (ஆடினநடள) சிறப்பான முறையில் நேரடிக் காட்சியாக பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.
இவ்வரங்குகளில், அரசின் சாதனை விளக்கப் படக்காட்சிகள் தொடர்ந்து ஒளிப்பரப்பப்பட்டு வருகின்றது. மேலும், அரங்கிற்கு வருகைதரும் பார்வையாளர்களுக்கு, அரங்கில் இடம்பெற்றுள்ள துறைகளின் சாதனைகள் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில், பல்வேறு மாநிலங்களும் அரங்குகள் அமைத்து தங்களின் சாதனைகளைக் காட்சிப் படுத்தியுள்ளன. பங்கேற்கும் அனைத்து மாநிலங்களும், தங்களது மாநில நாள் விழாவினைக் கொண்டாடி வருகின்றனர்.  அவ்வகையில் """"தமிழ்நாடு நாள்"" விழா இன்று (15.11.2019) பிரகதி மைதானத்தில் உள்ள """"ஹம்சத்வனி"" கலையரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  இவ்விழாவினை,  மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு அவர்கள் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா,  மற்றும் உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் வச்சானி ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தார்கள். இயக்குநர் செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு கூடுதல் செயலாளர் முனைவர் பொ. சங்கர்,இணை இயக்குநர் (கள விளம்பரம்) முத்துசாமி  ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
இவ்விழாவில், மதுரை தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையத்தின் தலைவர் தி. சோமசுந்தரம்  குழுக் கலைஞர்களின் மூலம் கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், நையாண்டிமேளம் (நாதஸ்வரம் மற்றும் தவில்) ஆகிய தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கிராமியக் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.  விழாவின் இறுதியில்  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அவர்கள் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.  இந்நிகழ்ச்சியில், டெல்லியில் வசிக்கும் தமிழர்கள் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
முன்னதாக, தமிழ்நாடு அரங்கினை  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு , புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா,  மற்றும் உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் வச்சானி,  ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.  இயக்குநர் செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசு கூடுதல் செயலாளர் முனைவர் பொ. சங்கர், மற்றும் வேளாண்மைத் துறை இயக்குநர் வி. தட்சணாமூர்த்தி, ஆகியோர் பார்வையிட்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo