Onetamil News Logo

ஐநா கூட்டத்தில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டு பெண் பிரநிதிகள் பங்கேற்பு 

Onetamil News
 

ஐநா கூட்டத்தில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டு பெண் பிரநிதிகள் பங்கேற்பு 


USK at UN Geneva: Inputs on the Achievement of Sustainability 
Participation of the United States of KAILASA in a discussion on the General Comment on Economic, Social and Cultural Rights and Sustainable Development at the United Nations in Geneva.
 22 - 02 - 2023 அன்று ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் சுவாமி நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பெண் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கைலாசா நாட்டின் சார்பில் விஜயபிரியா நித்யானந்தா, ஐநாவுக்கான நிரந்தரத்தூதர் முக்திகா ஆனந்தா, லாஸ்ஏஞ்செனல்ஸ் கைலாசாவின் தலைவர் சோனா காமத், செயின்ட் லூயிஸ் கைலாசாவின் தலைவர் நித்யா ஆத்மதயகி, பிரிட்டன் கைலாசாவின் தலைவர் நித்யா வெங்கடேஷானந்தா, பிரான்ஸ் கைலாசாவின் தலைவர் ஸ்லோவேனி, பிரியாபிரேமா நித்யானந்தா ஆகியோர் பங்கேற்றனர்.
கைலாசாவின் பெண் பிரதிநிதிகள் ஐநா கூட்டத்தில் பங்கேற்று, உலகில் பெண்களுக்கு  பாலியல் அடிப்படையிலான வேறுபாடுகள், துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதை புள்ளிவிவரங்களோடு குறிப்பிட்டனர்.
5 மண்டலங்களில் உள்ள 85 சதவீத பெண் எம்பிக்கள், உளவியல்ரீதியான வன்முறை, பாலியல் வன்முறைகள், மிரட்டல்கள் உள்ளிட்டவற்றை சந்தித்துள்ளனர். 44 சதவீதம்பேர், கொலைமிரட்டல், பாலியல் வன்முறை, தாக்குதல் உள்ளிட்டவற்றை குடும்பத்துக்குள்ளாகவே சந்தித்துள்ளனர் எனத் தெரிவித்தனர். ஆதலால் பெண்கள் உரிமைகளைக் காக்க  அவசரமாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo