Onetamil News Logo

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் -  மரக்கன்று நடும் விழா

Onetamil News
 

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் -  மரக்கன்று நடும் விழா 


                        
நாகப்பட்டினம் 2018 மே 10 ; நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் -  மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
 
நாகப்பட்டினம் மீன்வளப் பொறியியல் கல்லூரியானது  நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்பு முகாமை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,  குத்தாலத்தில்  07.05.2018  முதல் 13.05.2018 வரை சிறப்பாக நடத்தி வருகின்றது. இந்த சிறப்பு முகாமானது  'தூய்மையில் இளைஞர்கள் ' என்ற நோக்கத்தினைக் கொண்டது. இதில் இளங்கலை மீன்வளப் பொறியியல் பயிலும்  சுமார் 40  மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக குத்தாலம்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம் மற்றும் அருள்மிகு ஆபத்சகாய சுவாமிகள் திருக்கோவில் வளாகம் ஆகியவற்றை சுத்தம் செய்து மரக்கன்று நடும் விழாவானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.S.இராஜசேகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில்  நாட்டு நலப்பணி திட்டத்தின் நோக்கத்தையும் அதனை செயல்படுத்துவதில் மாணவர்களின் பங்கினையும் எடுத்துரைத்தார். மேலும் அவர் பேசுகையில் மத்திய அரசானது இந்த  நாட்டு நலப்பணி திட்டத்தின் முக்கியத்துவத்தையும் நாட்டின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்கினையும் உணர்ந்ததாலேயே பிரதமரின் இருபது-முன்னுரிமைத் திட்டத்தின் கீழ்  நாட்டு நலப்பணி திட்டமானது வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் மீன்வளப் பொறியியல் கல்லூரி  முதல்வர்  முனைவர்.S.பாலசுப்ரமணியன், திரு.சந்தோஷ் காட்சன் ஐசக், அறிவியல் ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குத்தாலம், திரு.மயில் வாகனன்,   நாட்டு நலப்பணி திட்ட அலுவலர், AVC கல்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாமை முனைவர்.D. கேசவன் மற்றும் முனைவர்.M. இராமர், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.   

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo