ஒடிசா ரயில் விபத்து,ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 280 ஐ தாண்டியுள்ளது.
புவனேஷ்வர் 2023: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று ஒடிசா மாநிலத்தில் விபத்தில் சிக்கியது. இந்த ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 280 ஐ தாண்டியுள்ளது. இந்த ரயில் பயணம் தொடங்கியதில் இருந்து விபத்து நடந்தது வரை நடைபெற்ற நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். சென்னை சென்ட்ரல் - கொல்கத்தாவின் ஷாலிமார் இடையே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து மேற்கு வங்காளம் வரை செல்லும் இந்த ரயிலில் புலம் பெயர் தொழிலாளர்கள் உள்பட பலரும் அதிகம் பயணிப்பதுண்டு. எப்போதும் பயணிகள் கூட்டம் இந்த ரயிலில் அலை மோதும். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் நேற்று நேற்று மாலை ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. இந்த ரயிலில் பயணிகள் அனைவரும் தங்கள் செல்போனில் பேசிகொண்டும் அருகில் உள்ளவர்களிடம் பெசிய படியும் வேடிக்கை பார்த்தபடியும் வந்து கொண்டு இருந்தனர். இரவு சுமார் 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் பெங்களூரில் கொல்கத்தா சென்ற ஒரு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது. அந்த ரயிலின் பெட்டிகள் ரெயிலின் சில பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன. இதனால், அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், அந்த தண்டவாளத்தில் மீது மோதியது. இதில் ரயில் பெட்டிகள் உருக்குலைந்து ஒன்றன் மேன் ஒன்றாக கிடந்தன. இதில் பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைவாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 280- ஐ தாண்டியுள்ளது. சுமார் 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகள் எத்தனை பேர் என்ற விவரம் முழுமையாக கிடைக்கவில்லை.
நேற்று மாலை 3.20 மணிக்கு ஷாலிமார் - சென்னை கோரமண்டல் விரைவு ரயில் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. * நேற்று மாலை 6.30 மணிக்கு ஹவுராவில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் பாலசோர் வந்தது. ஒடிசா பாலசோர் ரயில் நிலையத்தில் கோர மண்டல் விரைவு ரயில் 5 நிமிடங்கள் நின்று புறப்பட்டது. பாலசோர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் பனாபனா ரயில் நிலையத்தை மாலை 6.50 மணிக்கு கடந்தது. 7 மணியளவில் UP Line தடத்தில் சென்ற கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானது. பெங்களுர் - ஹவுரா அதிவிரைவு ரயில் கோரமண்டல் மீது மோதியது.