Onetamil News Logo

அலெக்சாண்டர் ரியாவின் வடக்கு வல்லநாடு என்ற தொல்லியல் களத்தை அடையாளப்படுத்தியதோடு புதியதாக சூலக்கல் கண்டுபிடிப்பு

Onetamil News
 

அலெக்சாண்டர் ரியாவின் வடக்கு வல்லநாடு என்ற தொல்லியல் களத்தை அடையாளப்படுத்தியதோடு புதியதாக சூலக்கல் கண்டுபிடிப்பு


வல்லநாடு  2020 செப் 26 ; தூத்துக்குடியிலுள்ள வ.உ.சிதம்பரம் கல்லூரியில் வரலாற்றுத்துறையில் முனைவர் கி.சசிகலா அவர்களின் வழிகாட்டுதலில் மா.ஆறுமுக மாசான சுடலை என்பவர் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். இவர் தன்னுடைய களஆய்வு மூலமாக இதுவரை யாரும்கண்டு பிடிக்காத உழக்குடி, கலியாவூர், சீவலப்பேரி ஆகிய மூன்று புதிய தொல்லியல் அகழாய்வுக்களங்களைக் கண்டுபிடித்துள்ளார். தாமிரபரணி ஆற்றங்கரை ஓரங்களில் அலெக்சாண்டர்ரியா அவர்கள்1904ம் ஆண்டு அகழாய்வு மூலம் ஆதிச்சநல்லூர் உட்பட37இடங்களைக் கண்டுபிடித்தார். இந்த 37 இடங்களிலும் மா.ஆறுமுக மாசான சுடலை கண்டுபிடித்த உழக்குடி, கலியாவூர், சீவலப்பேரி ஆகிய மூன்று இடங்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் எந்த ஆதாரமும் இல்லாமல் வடக்கு வல்லநாடு கிராமத்தோடு உழக்குடி கிராமத்தை எந்த நபரும் தொடர்பு படுத்தி செய்திகள் வெளியிட வேண்டாம். 
அலெக்சாண்டர்ரியா  குறிப்பாக, 1.ராஜவல்லி பரம்பு, 2.பாலாமடை, 3.மணப்படைவீடு, 4.கீழநத்தம், 5.பாளையங்கோட்டை, 6.கிருஷ்ணாபுரம் பரம்பு, 7.வடக்குவல்லநாடு, 8.வல்லநாடு, 9.அகரம், 10.முறப்பநாடு, 11.வசவப்பபுரம், 12.அனவரதநல்லூர், 13.விட்டிலாபுரம், 14.கொங்கராயக்குறிச்சி, 15.கருங்குளம், 16.ஆதிச்சநல்லூர், 17.ஸ்ரீவைகுண்டம், 18.திருப்புளியங்குடி, 19.புதுக்குடி, 20.வெள்ளூர், 21.கால்வாய், 22.மளவராயநத்தம், 23.ஆழ்வார்திருநகரி, 24.அழகியமணவாளபுரம்- செம்பூர், 25.திருக்கோளூர், 26.அப்பன் கோவில், 27.தென்திருப்பேரை, 28.புறையூர், 29.அங்கமங்கலம், 30.குரும்பூர், 31.நாலுமாவடி, 32.நல்லூர், 33.சுகந்தலை, 34.கொற்கை, 35.மாறமங்கலம், 36.காயல்பட்டிணம், 37.வீரபாண்டியன்பட்டணம்ஆகிய 37 இடங்களைக் கண்டுபிடித்து அங்கு எதிர்காலங்களில் பெரியஅளவிலான அகழாய்வுகள் செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வட வல்லநாடு: தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகாவில் வடவல்லநாடு (வடக்குவல்லநாடு) என்றஇடம்உள்ளது. இந்த இடமானது அலெக்சாண்டர்ரியா  கண்டுபிடித்த 37 இடங்களில்ஒன்றாகும். அலெக்சாண்டர்ரியா  கண்டுபிடித்த இவ்விடத்தை எந்தவொரு ஆய்வாளரும், தனிநபரும் இதுவரை அடையாளப்படுத்தி வெளிக்கொண்டு வரவில்லை. தற்போது மா.ஆறுமுகமாசான சுடலை தன்னுடைய கள ஆய்வுமூலம் இவ்விடத்தை அடையாளப்படுத்தி வெளிக்கொண்டு வந்துள்ளார்.
வடவல்லநாடு (வடக்குவல்லநாடு) என்ற தொல்லியல் களமானது,வடவல்லநாடு பகுதிக்குஉட்பட்டசேதுராமலிங்கபுரம் என்ற கிராமத்திலிருந்து விளாத்திகுளம்என்ற கிராமத்திற்கு சாலைஒன்றுசெல்கிறது. சேதுராமலிங்கபுரம் என்ற கிராமத்திற்கு சற்றுகிழக்கில், இந்த சாலையின் வடபுறமிருந்து வடக்கு திசையிலுள்ள நாணல் காட்டான்குளம்என்றகிராமம் வரையிலும் விவசாயத்திற்குப் பயன்படாத, சரளைக்கற்கல் நிறைந்த மேட்டுப்பகுதி உள்ளது. இவ்விடத்தை அடையாளம் காண்பதற்கு க.மாரிமுத்து (விளாத்திகுளம்), வே.கருத்தபாண்டியன் (கோனார்குளம்) ஆகிய இருவரும் உதவினார்கள். இக்கள ஆய்வானது வடவல்லநாடு என்றஇடத்தைத் தொல்லியல் துறைக்கு அடையாளப்படுத்தும் விதமாகஅமைந்தது.
மேலும் இவ்விடத்தில் பழங்காலத்தைச் சேர்ந்த கல் ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். இந்த கல்லானது இருக்கின்ற பகுதியில் முதுமக்கள் தாழிகள் உடைந்த நிலையில் சிதறிக்கிடக்கின்றன. ஆகையால் இக்கல்லானது நடுகல்லாக இருக்கலாம் என்பது தெரியவருகிறது என்று கூறினார். 
இங்கு இவர்களஆய்வு மேற்கொண்டபோது, அந்தமேட்டுப்பகுதி (சேதுராமலிங்கபுரத்திலிருந்து - நாணல்காட்டான்குளம்வரை) முழுவதும் பல்வேறு வகையிலான மட்பாண்டங்களும், முதுமக்கள் தாழிகளும் உடைந்த நிலையில் சிதறிக்கிடப்பதைக் கண்டார். இத்தகைய தொல் எச்சங்கள் சுமார் 20 ஏக்கருக்கு மேல் சிதறிக் கிடக்கின்றன. இந்த மேட்டுப்பகுதியில் களஆய்வு மேற்கொள்வதறக்கு முனைவர் வி.தீப்தி (துறைத்தலைவி, வரலாற்றுத்துறை, மனோன்மணியம்சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி) சு. சுதாகர்,ரா.முருகன், ரா.ஸ்ரீநாத், உதயகுமார், சு.பேச்சிமுத்து, பொ.போஸ், அ.ஜெகிலா, ம.ஆரோக்கிய செல்வ சுந்தரி, ம.லாவண்யா ஆகியோர்கள் தேவையான உதவிகளைச் செய்தார்கள்.
சூலக்கல்: வட வல்லநாடு பகுதிக்கு உட்பட்ட நாணல் காட்டான்குளம் என்ற கிராமத்திற்கு வட புறமாக களஆய்வினை மேற் கொண்ட போது அங்கே ஒரு“சூலக்கல்”இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். இக்கல்லை அடையாளம் காண்பதற்கு ரா.கிருஷ்ணநாதன் ( நாணல் காட்டான் குளம்) என்பவர் உதவினார்.
வழிபாட்டுத் தளங்களில் தினமும் எவ்விதத்தடையும் இல்லாமல் வழிபாடு நடைபெறவேண்டும் என்பதற்காக மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் நிலத்தை அவ்வழிபாட்டுத் தளங்களுக்குத்தானமாக வழங்கும் வழக்கம் இருந்தது. இவ்வாறு நிலத்தை சிவ ஆலயங்களுக்கு வழங்குவது என்பது நிலதானம், தேவதானம் என்றும், திருமால் ஆலயங்களுக்கு வழங்குவது என்பது திருவிடையாட்டம் என்றும், சமண,புத்தப்பள்ளிகளுக்கு வழங்கபடுவது பள்ளிச்சந்தம் என்றும்அழைக்கப்படுகிறது. இவ்வாறு தானமாக வழங்கப்பட்ட நிலங்களினுடைய நான்கு புறங்களிலும் அடையாளப்படுத்தும் விதமாக கற்கள் நடப்பட்டது. சிவ ஆலயங்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலங்களில் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்டகற்கள்நடப்பட்டன. இக்கல்லே “சூலக்கல்”என்றுஅழைக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை பெரும்பாலும் 12- ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடவல்லநாடு பகுதியில்சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். இங்கு மேற்கொண்ட களஆய்வுக்கு, முதுமுனைவர்.மு.ஐயப்பன் (உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, வ.உ.சிதம்பரம்கல்லூரி, தூத்துக்குடி) மு.முத்துக்கனி (துறைத்தலைவி, விலங்கியல் துறை, ஏ.பி.சி.மகாலெஷ்மி கல்லூரி, தூத்துக்குடி) முத்துக்குமார் (கிராம நிர்வாக அதிகாரி-கலியாவூர் & உழக்குடி), வெ.கண்ணன், மு.அமர்சக்தி, கா.அபிராமிசுந்தரி, மா.விஜயலெட்சுமி, மு.செல்வகுமார் ஆகியோர்கள் தேவையான உதவிகளைச் செய்தார்கள். மேலும், இதுவரை என்னுடைய அனைத்து தொல்லியல் கண்டுபிடிப்புகளையும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் திருநெல்வேலியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மதிப்பிற்குரிய முனைவர் கா.பிச்சுமணி அவர்களுக்கும், எனக்கு முனைவர்பட்ட ஆய்வாளர் என்ற அங்கீகாரத்தைக் கொடுத்த தூத்துகுடியிலுள்ள வ.உ.சிதம்பரம் கல்லூரி நிர்வாகத்திற்கும், எனதுகல்லூரியின் செயலர் வீ. சொக்கலிங்கம் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் சொ.வீரபாகு அவர்களுக்கும், என்னுடைய அனைத்து தொல்லியல் கண்டுபிடிப்புகளுக்கும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தினை அடையாளப்படுத்தி, வரைபடம் தயாரிக்கும் மிகவும் இன்றியமையாத பணியைச்செய்துவரும் சிதம்பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புவி அறிவியல் துறையில் ஒருங்கிணைந்த  5 ஆம் ஆண்டு படித்து வரும் ரா. அபிநயா அவர்களுக்கும்,என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இங்கு அகழாய்வு மேற்கொள்ளும் பட்சத்தில்தமிழனின் தொன்மையான தாமிரபரணி நாகரிகத்தை வெளிக்கொண்டு வரமுடியும் என்று இவ்வாறு அவர் கூறினார்,
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo