அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழா
கோவில்பட்டி 2022 ஜூலை 31 ;அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கினர்.
சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக மாவட்டச் செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன் தலைமையில், கோவில்பட்டி வடக்கு நகரம் செயலாளர் பழனி முருகன் முன்னிலையில், புதுக்கிராமம் வசந்தம் நகர் பகுதியில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு,புத்தகம், பள்ளி சீருடைகள், வழங்கினர். இந்நிகழ்ச்சியில் 8வது வார்டு சார்பாக ,நகர அவை தலைவர் அய்யம்பெருமாள் பிள்ளை ஏற்பாட்டில், நகர துணை செயலாளர் வெங்கடேஷ், மற்றும் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.