Onetamil News Logo

தளிர் அறக்கட்டளையும், அற்புதம் மருத்துவமனை சார்பில் 1000 பேருக்கு சானிட்டைசர் வழங்கல்

Onetamil News
 

தளிர் அறக்கட்டளையும், அற்புதம் மருத்துவமனை சார்பில் 1000 பேருக்கு சானிட்டைசர் வழங்கல்


தூத்துக்குடி 2020 மார்ச் 31 ; தூத்துக்குடி தளிர் அறக்கட்டளையும், அற்புதம் மருத்துவமனை ஆகியவை இணைந்து கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், பணியாற்றும் அரசு மற்றும் தனியார் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு சானிட்டைசர் மற்றும் முக கவசங்கள் ஆகியவற்றை வழங்கிய‌து.
கரோனா வைரஸ் வேகமாக பரவி நிலையில், தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தரும் வகையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் அரசுக்கு உதவி வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி தளிர் அறக்கட்டளையும், தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனை ஆகியவை இணைந்து கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், பணியாற்றும் அரசு மற்றும் தனியார் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு சானிட்டைசர் மற்றும் முக கவசங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளது.
இவைகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் தளிர் அறக்கட்டளை தலைவர் ஆ.தனபால், தலைமை அதிகாரி ஜெயப்பிரகாஷ், அற்புதம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர். ஜேம்ஸ், தளிர் தாயாரிப்புகளின் தலைவர் த.கஸ்தூரி ஆகியோர் வழங்கினர். தளிர் அறக்கட்டளையின் மக்கள் சேவைப்பணி  மென்மேலும் சிறக்க பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து, தளிர் அறக்கட்டளை தலைவர் ஆ.தனபால் கூறுகையில், எங்கள் அறக்கட்டளை ஊரக கல்வி மேம்பாட்டு பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இண்டர் நேஷன‌ல் பயிற்சியை இலவசமாக வழங்கி வருகிறோம். தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறோம் என்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo