வரும் மே 26ம் தேதி தூத்துக்குடி என்.பெரியசாமி 6ம் ஆண்டு நினைவு தினம்,மூத்த அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள்.
வரும் மே 26ம் தேதி தூத்துக்குடி என்.பெரியசாமி 6ம் ஆண்டு நினைவு தினம்,மூத்த அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள்.
தூத்துக்குடி என்.பெரியசாமி ஆறாம் ஆண்டு நினைவு தினம் 26ம் தேதி நடைபெறுகிறது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோரது தந்தையும் மறைந்த திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் தூத்துக்குடி துறைமுகசபை பொறுப்புக்குழு உறுப்பினரும் தொழிற்சங்க தலைவருமான என். பெரியசாமி மறைந்த ஆறாம் ஆண்டு நினைவுதினம் வரும் 26ம் தேதி வெள்ளிக்கிழமை தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக உள்பட பல்வேறு கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பொதுநல அமைப்பினர் பங்கேற்று மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். நினைவு தினத்தையொட்டி அன்னதானம் வழங்கப்படுகிறது. மூத்த அமைச்சர் கே.என்.நேரு நேரில் வருகைபுரிந்து மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.ஆறாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்.பெரியசாமி குடும்பத்தினர் செய்துள்ளனர்.