தூத்துக்குடியில் கருணாநிதி 100வது பிறந்த நாளையொட்டி எட்டயாபுரம் சாலையில் உள்ள கலைஞர் படத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை,3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி ஏற்பாடு
தூத்துக்குடி 3 ஜூன் 2023: தூத்துக்குடி எட்டயாபுரம் சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு காலனி முன்பு கருணாநிதி 100வது,பிறந்த நாளையொட்டி கலைஞர் படத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தூத்துக்குடி திமுக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 100வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் ஹவுசிங் போர்டு காலனி முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாநகராட்சி 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத்தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர் அந்தோணி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராஜேந்திரன் ,கழக நிர்வாகிகள் வேல்முருகன்,செல்வராஜ் KTC,சண்முகையா, செல்லையா,ராஜாமணி, பால்ராஜ்,சங்கரநயினார், வின்சென்ட், பெயிண்டர் ராஜசேகர், அண்ணா துரை,ராஜ்,ராஜா ,முத்துராஜ்,பால சுப்ரமணியன்,ஆறுமுகம், துரைராஜ், செல்வராஜ்EB,லிங்கசாமி , சேவியர், காளிமுத்து மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் பங்கேற்றனர்.