கருணாநிதி 100வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமணையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி 2023 ஜூன் 4 ;முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 100வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமணையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி திமுக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 100வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அரசு மருத்துவமணையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி மற்றும் அரசு மருத்துவமணையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து பொருட்களை மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ்,தூத்துக்குடி மாநகர இளைஞரணி முன்னாள் துணைச் செயலாளர் மற்றும் வட்ட கழகச் செயலாளருமான க.கீதா செல்வ மாரியப்பன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ்,உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், மாணவரணி துணை அமைப்பாளர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.