மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ். ஜோயல் ஏற்பாட்டில்இரத்த தான முகாம்
மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ். ஜோயல் ஏற்பாட்டில்இரத்த தான முகாம் நடைபெற்றது.
மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் ஏற்பாட்டில், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற பிரமாணடமான இரத்ததான முகாமை மாவட்ட துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ். ஜோயல் ஏற்பாட்டில் தூத்துக்குடி மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் KSPS திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமை தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.சத்யராஜ் தலைமையேற்று தொடங்கி வைத்தார். தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்க செயலாளர் எம்.எஸ்.பி.தேன்ராஜ், உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குருதி கொடையாளர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
உதயநிதி மன்ற நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என பலரும் இம்முகாமில் ரத்ததானம் செய்தனர். அரசு மருத்துவமனை ரத்ததான பிரிவு தலைவர் டாக்டர் சாந்தி தலைமையிலான ரத்த தான பிரிவு அலுவலர்கள் ரத்த தானம் பெற்றனர். முகாமில் ராஜாஜி பூங்கா அருகில் உள்ள உதயநிதி பிரஸ் ஜூஸ் பார் கடை உரிமையாளர் மாற்றுத்திறனாளி ஜஸ்டின் இரத்தம் வழங்கினார்.
முகாமை தூத்துக்குடி மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பால்துரை, மாவட்ட பொருளாளர் சேக் முகமது, மாவட்ட துணை பொருளாளர் செந்தில், ராஜா, மாவட்ட துணைத் தலைவர் நடராஜன், திருச்செந்தூர் சுரேஷ், மாவட்ட துணைச் செயலாளர்கள் காளீஸ்வரன், முருகன், புதுக்கோட்டை சிவமுருகன், மாநகர செயலாளர் APR.ஜோ, மாநகர துணைத் தலைவர் VJ.அருண், மாநகர துணைச் செயலாளர் டினோ, மாநகர பொருளாளர் முகமது, மாநகர துணை பொருளாளர் சுப்பிரமணியன், விளாத்திக்குளம் ஒன்றிய தலைவர் ரவி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் கார்த்தீஸ்
மற்றும், திமுக இளைஞரணி மை சார்ந்த செந்தில், மட்டகடை சகிலன், தொழிலதிபர் வசந்த், விமல் ஜீ, சிலுவைப்பட்டி பாரி, மாணிக்கபுரம் விஜய், சிவகுமார், தினகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு இம்முகாமை ஒருங்கிணைத்தனர்.